கைதி, மாஸ்டரை அடுத்து கமலின் விக்ரமிலும் நடிக்கும் அர்ஜூன் தாஸ்?

0
10

கைதி, மாஸ்டரை அடுத்து கமலின் விக்ரமிலும் நடிக்கும் அர்ஜூன் தாஸ்?

உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து தான் இயக்கவிருக்கும் விக்ரம் படத்தில் அர்ஜுன் தாஸை நடிக்க வைக்கப் போகிறார் லோகேஷ் கனகராஜ் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்தியன் 2 படப்பிடிப்பு தயாரிப்பாளருக்கும், ஷங்கருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் முடங்கியுள்ள நிலையில், விக்ரம் படத்தில் கவனம் செலுத்த உள்ளார் கமல். லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரமில் நடிகர்கள் தேர்வு மீண்டும் சுறுசுறுப்படைந்துள்ளது.

டீஸருடன் விக்ரம் பட அறிவிப்பை வெளியிட்டு அமர்க்களமாக முன் தயாரிப்பு பணிகளை தொடங்கினர். கமல் தேர்தல் பணிகளில் பிஸியானதால் விக்ரம் படவேலைகளில் சுணக்கம் ஏற்பட்டது. தேர்தலுக்கு மறுநாள் கமலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ், ஆரம்பிக்கலாங்களா? என கமெண்ட் போட்டிருந்தார்.
படப்பிடிப்பு உடனே தொடங்கும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், படப்பிடிப்பு தொடங்கவில்லை.

இந்த ஆக்ஷன் படத்தில் கமலுடன் பகத் பாஸில் நடிக்கிறார். தன்னிடம் வில்லனாக நடிக்கக் கேட்டதாக விஜய் சேதுபதி கூறியிருந்தார். அவர் நடிக்கிறாரா என்பதை இன்னும் உறுதி செய்யவில்லை.

இந்நிலையில் தனது கைதி, மாஸ்டர் படங்களில் நடித்த அர்ஜுன் தாஸை விக்ரம் படத்துக்காக லோகேஷ் கனகராஜ் ஒப்பந்தம் செய்துள்ளார். மலையாள நடிகர் ஆன்டணி வர்க்கீஸை நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தை நடக்கிறது.

ஒரே ஷெட்யூலில் விக்ரம் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர். அனிருத் படத்துக்கு இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வரலாம்.

ஆனால் இந்தியன் 2 பஞ்சாயத்தால் விக்ரம் படப்பிடிப்பை திட்டமிட்டபடி நடத்த முடியுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

மெல்லவும் முடியல, விழுங்கவும் முடியல: புது சிக்கலில் கமல்
இந்தியன் 2 பட பிரச்சனை தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. தீர்ப்புக்காக ஷங்கரும், லைகா நிறுவனமும் காத்திருக்கிறாார்கள். படப்பிடிப்பை உடனே துவங்க வேண்டும் என்று தீர்ப்பு வந்தால் கமலால் விக்ரமுக்கு அல்ல மாறாக இந்தியன் 2 படத்திற்கு தான் டேட்ஸ் கொடுக்கும்படி ஆகிவிடும்.

தீர்ப்பு வர தாமதமாகிறதே என்று விக்ரம் படப்பிடிப்பை துவங்கிய பிறகு நீதிமன்றம் இந்தியன் 2 குறித்து உத்தரவிட்டாலும் சிக்கலாகிவிடும். அதனால் இந்தியன் 2 படம் குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பை லோகேஷும், கமலும் கூட எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.