கே.வி.ஆனந்த் இயக்கும் சூர்யாவின் 37-வது படம்: 10 நாடுகளில் படப்பிடிப்பு

0

கே.வி.ஆனந்த் இயக்கும் சூர்யாவின் 37-வது படம்:

10 நாடுகளில் படப்பிடிப்பு 

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது, செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சூர்யாவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

அதன்படி சூர்யாவின் 37-வது படத்தை கே.வி.ஆனந்த் இயக்கவிருக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். திரைக்கதை, வசனம் உருவாக்கத்தில் கே.வி.ஆனந்துடன் பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் இணைந்திருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை மாத இறுதியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்புக்காக 10 நாடுகளுக்கு சூர்யாவை அழைத்து செல்ல இருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த். எந்தந்த நாடுகள் என்று விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.