கேரளா ரசிகர்களை ஏமாற்றிய சிவகார்த்திகேயனின் டாக்டர்…!

0
42

கேரளா ரசிகர்களை ஏமாற்றிய சிவகார்த்திகேயனின் டாக்டர்…!

வரும் 28 ஆம் தேதி டாக்டர் கேரளாவில் வெளியாகிறது. அனைத்துத் தமிழ்ப் படங்களையும் போல மொழிமாற்றம் எதுவும் செய்யப்படாமல் தமிழிலேயே வெளியாகிறது.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘டாக்டர்’. இப்படம் கடந்த 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் காமெடி, ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என் அனைத்தும் படத்தில் ஒர்க் அவுட் ஆகி உள்ளது. இதனால் டாக்டர் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. வசூலிலும் இப்படம் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் கேரளாவில் வரும் 28 ஆம் தேதி வெளியாகிறது. 100 க்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியாகும் என நினைத்த நேரத்தில், அதைவிட குறைவான திரையரங்குகளே படத்துக்கு கிடைத்துள்ளன.

தமிழ்ப் படங்களுக்கு கேரளாவில் எப்போதும் வரவேற்பு உண்டு. விஜய்தான் அங்கு சூப்பர் ஸ்டார். அவரை அடுத்து வருகிறவர் சூர்யா. இப்போது அஜித்துக்கும் ரசிகர்கள் கூட ஆரம்பித்துள்ளனர். விஜய் படம் வெளியாகும் போது நேரடி மலையாளப் படங்கள் தள்ளிப் போகும்.. அந்தளவுக்கு விஜய் படங்களுக்கு கேரளாவில் ஓபனிங் உண்டு. இப்போது சிவகார்த்திகேயன் படங்களும் மலையாளிகளால் விரும்பிப் பார்க்கப்படுகின்றன.

கேரளாவில் நேற்றிலிருந்து திரையரங்குகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும், திரையரங்கு ஊழியர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக படம் பார்க்க வருகிறவர்களும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு பரவலான எதிர்ப்பு உள்ளது.

வரும் 28 ஆம் தேதி டாக்டர் கேரளாவில் வெளியாகிறது. அனைத்துத் தமிழ்ப் படங்களையும் போல மொழிமாற்றம் எதுவும் செய்யப்படாமல் தமிழிலேயே வெளியாகிறது.

நோ டைம் டு டை, வெனம் 2 போன்ற ஆங்கிலப் படங்களும், தெலுங்கு லவ் ஸ்டோரி படத்தின் மலையாள டப்பிங்கும், டாக்டருமே கேரளாவில் அதிக திரையரங்குகளில் வெளியாகின்றன. டாக்டர் 100 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை 86 திரையரங்குகளே உறுதி செய்யப்பட்டுள்ளது.

படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படலாம்.