‘கேப்டன் மில்லர்’ படத்தின் மதுரைப் பகுதி திரையரங்கு வெளியீட்டு உரிமையை, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது!

0
129

‘கேப்டன் மில்லர்’ படத்தின் மதுரைப் பகுதி திரையரங்கு வெளியீட்டு உரிமையை, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது!

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இவ்வருட பொங்கல் கொண்டாட்டமாக, பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகும் “கேப்டன் மில்லர்” படத்தின், மதுரைப் பகுதிக்கான திரையரங்கு வெளியீட்டு உரிமையை, முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது.

சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்க, தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வரலாற்றுப் பின்னணியில், பிரம்மாண்ட ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘கேப்டன் மில்லர்’.

தமிழ் திரையுலகில் பல தரமான வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்து வழங்கியதுடன், பல ப்ளாக்பஸ்டர் படங்களை வெளியிட்டுள்ளது ராகுல் அவர்களின் ரோமியோ பிக்சர்ஸ். நேர்கொண்ட பார்வை, வலிமை, நெஞ்சுக்கு நீதி, வீட்ல விஷேசம், டிரிக்கர், துணிவு, பாபா பிளாக் ஷீப் போன்ற ப்ளாக்பஸ்டர் படங்களை இந்நிறுவனம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளித்து வரும் ரோமியோ பிக்சர்ஸ் தற்போது கேப்டன் மில்லர் படத்தினை மதுரைப்பகுதியில் வெளியிடுகிறது.

கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 12 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.