“கெட்டவன் கேட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்”: அடுத்த படம் குறித்த அறிவிப்பை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் சிம்பு

0

“கெட்டவன் கேட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்”: அடுத்த படம் குறித்த அறிவிப்பை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் சிம்பு

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து சமீபத்தில் வெளியான `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் முதல் பாகம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. மேலும் கடும் விமர்சனங்களுக்கும் உள்ளானது. இதையடுத்து `ஏஏஏ’ படத்தின் அடுத்த பாகம் உருவாக வாய்ப்பில்லை என்று செய்திகளும் வரத் தொடங்கியது. ஆனால் அந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படத்தின் இயக்குநர் இரண்டாவது பாகம் உருவாகும் என்றும் உறுதி அளித்திருந்தார்.

இதற்கிடையே சிம்பு தான் கைவிட்ட `கெட்டவன்’ படத்தின் பணிகளை மீண்டும் துவங்க இருப்பதாகவும், `பில்லா’ படத்தின் மூன்றாவது பாகத்தை அவரே இயக்கி நடிக்க இருப்பதாகவும் வதந்திகள் பரவத் தொடங்கின.

இதையடுத்து நடிகர் சிம்பு, அவரது டுவிட்டர் பக்கத்தில் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். அதில், தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள். தேவையில்லாமல் ஊகத்தில் செய்தி வெளியிடுவதை தயவுசெய்து நிறுத்துங்கள் என்று ஊடகத்திற்கும், தனது ரசிகர்களுக்கும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், இன்று அவரது அடுத்த படம் குறித்த தகவலை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ” “கெட்டவன் கேட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்” யுவன் ஷங்கர் ராஜா இசையில் சிலம்பரசன்.டி.ஆர். படம். 7 முறை விழுந்து விட்டேன், 8-வதாக எழுவேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மற்றுமொரு டுவிட்டில், “அந்த படத்தில் பாடல்கள் எதுவும் கிடையாது, இடைவேளை கிடையாது, எனவே கழிவறையை முன்பே பயன்படுத்தி விடுங்கள். படம் ஆரம்பிக்கும் முன்னரே டிரிங்ஸ், பாப்கார்னை வாங்கிவிடுங்கள், பார்க்காததை பார்க்கப்போகிறீர்கள். இந்த செப்டம்பர் 2017-ல் படம் ரிலீசாகும்”.

இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.