கூர்மன் விமர்சனம்: கூர்மன் தவறு செய்பவர்கள் தப்பித்தாலும் தேடி பிடித்து தண்டனை கொடுப்பதில் மர்மமானவன் புத்தி கூர்மையானவன்

0
78

கூர்மன் விமர்சனம்: கூர்மன் தவறு செய்பவர்கள் தப்பித்தாலும் தேடி பிடித்து தண்டனை கொடுப்பதில் மர்மமானவன் புத்தி கூர்மையானவன்

எம்.கே.எண்டர்டெயின்மென்ட் சார்பில் மதனகுமார் தயாரித்திருக்கும் கூர்மன்  படத்தில் ராஜாஜி, ஜனனி ஐயர், பால சரவணன், ஆடுகளம் நரேன், சூப்பர் குட் சரவணன், உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். படத்தை எமுதி இயக்கியிருக்கிறார் பிரையன்.பி.ஜார்ஜ். இந்த படத்திற்கு சக்தி அரவிந்த் ஒளிப்பதிவு செய்ய டோனி பிரிட்டோ இசையமைத்து உள்ளார். எடிட்டர்: எஸ்.தேவராஜ், கலை இயக்குனர்: கோபி கருணாநிதி, சண்டைக்காட்சிகள்: ஸ்டன்னர்சாம், ஒலி வடிவமைப்பு மற்றும் மிக்ஸ் : தாமஸ் குரியன், ஆடை வடிவமைப்பு: டினா ரொசாரியோ, ஒப்பனை: யு.கே.சசி, உடைகள் : ஜே. அப்பாராவ் சதீஷ், வண்ணம்: யுகேந்திரன், பாடல் வரிகள்: உமா தேவி, பிரையன் பி. ஜார்ஜ், தயாரிப்பு நிர்வாகி: டி.நரசிம்மன், நிர்வாகத்தயாரிப்பாளர்கள்: எஸ்.கணேஷ், சதீஷ் பிரபு, இணைதயாரிப்பு: சுரேஷ் மாரிமுத்து, இயக்குனர் குழு: வி.ஜே.நெல்சன், ராகேஷ் நாராயணன், கே.எஸ்.சதீஷ், ரித்திக்செல்வா, இன்பேன்ட் ஜல்ஸ், மக்கள் தொடர்பு : பரணி அழகிரி, திருமுருகன்.

உளவுத்துறையில் பணிபுரிந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் ராஜாஜி. தன் வாழ்க்கையில் நடந்த சோக சம்பவத்தால் தனிமையை தேடி 12 ஏக்கர் நிலபரப்பில் அமைந்திருக்கும் பண்ணை வீட்டில் தன் உதவியாளர் பாலசரவணன் மற்றும் செல்ல நாயுடன் வசிக்கிறார். மனதில் நினைப்பதை கண்டறியும் அசாத்திய திறன் கொண்ட ராஜாஜியை பற்றி தெரிந்தவர் உயர் அதிகாரி நரேன். தன்னிடம் வரும் குற்றவாளிகள் உண்மையை மறைத்தால் அதை கண்டுபிடிக்க ராஜாஜியின் உதவியை நாடி பலன் அடைந்து கொள்வார். அதன்படி ராஜாஜியின்; பண்ணை வீட்டிற்கு ஒரு பெண்ணை கற்பழித்து ஆசிட் வீசி கொன்ற குற்றவாளியை விசாரிக்க அழைத்து வருகின்றனர். அந்த குற்றவாளி ராஜாஜியின் கண்காணிப்பிலிருந்து தப்பித்து விடுகிறார். இதனால் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் ராஜாஜி, அந்த குற்றவாளியை தேடி செல்கிறார். ராஜாஜி குற்றவாளியை கண்டுபிடித்தாரா? தேடுதல் வேட்டையில் கண்டுபிடித்த உண்மையான காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

ராஜாஜி தனக்கு கொடுத்த கேரக்டருக்கு நூறு சதவீத உழைப்பை கொடுத்துள்ளார். அவரின் விசாரணை நுணுக்கங்கள் அதிர்ச்சியும், திகிலும் அடையச்செய்கிறது. காதல், சோகம், பழிக்குபழி, சண்டை என்று அசத்தலுடன் நடித்துள்ளார்.

சிறப்பு தோற்றம் என்றாலும் ஜனனி ஐயர் திறம்பட கையாண்டுள்ளார். பாலசரவணன் சலித்து கொண்டாலும் வேலையை சிறப்பாக செய்து ராஜாஜிக்கு நம்பிக்கைக்குரிய உதவியாளராக மிளிர்கிறார். உயர் அதிகாரியாக நரேன், ,பிரவீன் , முருகானந்தம், சூப்பர்குட் சுப்ரமணி , சதீஷ் பிரபு , பிரதீப் கே.விஜயன் , விஜய சங்கர் படத்திற்கு அச்சாணியாக இருந்து வெற்றிக்கு வழி வகுத்துள்ளனர்.

டோனி பிரிட்டோவின் இசை படத்திற்கு பலம்.

சக்தி அரவிந்த் ஒளிப்பதிவு க்ரைம் சம்பந்தப்பட்ட கதைக்குகேற்ற காட்சிக்கோணங்களும், வித்தியாசமான பண்ணை வீட்டின் சுற்றுப்புறத்தையும் அழகாக படம் பிடித்து அசத்தியுள்ளார்.

எடிட்டர்: எஸ்.தேவராஜ், கலை இயக்குனர்: கோபி கருணாநிதி ஆகியோர் கச்சிதமாக செய்திருக்கின்றனர்.

சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக  மனதில் உள்ளதை கண்டுபிடிக்கும் திரைக்கதையை உருவாக்கி உள்ளார் இயக்குனர் பிரையன்.பி.ஜார்ஜ். மற்றவர் மனதை கண்டுபிடிக்கும் ஒருவர் தன் மனதில் ஏற்பட்ட காயத்திலிருந்து விடுபட எடுக்கும் முயற்சிகள் எத்தகைய விளைவுகளை சந்திக்கிறது என்பதைச் சொல்லும் கதைக்களத்தில் சமூக பிரச்னையையும் கையிலெடுத்து தீர்வை நாயகனே கொடுப்பது போல் முடித்திருப்பதில் தனித்து நிற்கிறார் இயக்குனர் பிரையன்.பி.ஜார்ஜ். வெல்டன்.

மொத்தத்தில் எம்.கே.எண்டர்டெயின்மென்ட் சார்பில் மதனகுமார் தயாரித்திருக்கும் கூர்மன் தவறு செய்பவர்கள் தப்பித்தாலும் தேடி பிடித்து தண்டனை கொடுப்பதில் மர்மமானவன் புத்தி கூர்மையானவன்.