கீ திரை விமர்சனம் ரேட்டிங் 3/5

0

கீ திரை விமர்சனம் ரேட்டிங் 3/5

கல்லூரி மாணவரான ஜீவா படிப்பில் கோட்டை விட்டாலும் கணினி தொழில்நுட்பம் மூலம் விளையாட்டாக ஹேக் செய்வதில் கில்லாடி. இதன் மூலம் பத்திரிகையாளர் அனைகாவின் நட்பு கிடைக்கிறது. அனைகா ஹேக்கர் கும்பலால் பல பேர் சிக்கி தவிப்பதும், பல கொலைகள் நடப்பதையும் ஜீவாவிற்கு எடுத்துக் கூறி ஹேக்கர் கும்பலையும் அவர்களின் தலைவனையும் கண்டுபிடிக்குமாறு கூறுகிறார். ஜீவாவும் படாதபாடு பட்டு ஹேக்கர் தலைவனான கோவிந்த் பத்மசூர்யாவை கண்டுபிடிக்கிறார். இந்நிலையில் அனைகாவும் மாயமாகிவிடுகிறார்.அதன் பின் தான் தன் கல்லூரி தோழி மற்றும் அனைகா ஆகியோர் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் கோவிந்த் என்று கண்டுபிடிக்கிறார். கோவிந்த்தும் ஜீவாவை தேடி பழி வாங்கும் நேரத்தில் ஜீவாவின் தந்தை இதில் அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அதன் பின் கோவிந்த் ஜீவாவின் காதலி நிக்கி கல்ராணியை கடத்தி ஜீவாவை தற்காலை செய்து கொள்ளுமாறு மிரட்டுகிறார். இறுதியில் ஜீவா ஹேக்கர் கோவிந்த் இருக்கும் இடத்தை கண்டு பிடித்தாரா? தன் காதலியை மீட்டாரா? ஹேக்கர் கோவிந்தையும் அவரின் கூட்டாளிகளையும் எப்படி பழி வாங்கினார்? என்பதே க்ளைமேக்ஸ்.
ஜீவா எனர்ஜடிக்கான கல்லூரி மாணவானாக துறுதுறுவென்று துள்ளலுடன் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஹேக் செய்யும் டெக்னிக்கில் தேர்ச்சி பெற்று எதிரியை கண்டு பிடிக்கும் சாதுர்யத்தில் அதிர வைக்கிறார்.
காதலியாக நிக்கி கல்ராணி கலகலப்புடன் தன் பங்கை கச்சிதமாகவும், வில்லனாக கோவிந்த் பத்மசூர்யா அழகாக இருப்பதோடு அருமையாக அசால்டாக நடித்து விட்டு போகிறார்.
மற்றும் அனைகா சோடி, ஆர்.ஜே.பாலாஜி, கோவிந்த் பத்மசூர்;யா, சுகாசினி மணிரத்னம், மனோபாலா, மீரா கிருஷ்ணன், ராஜேந்திரா பிரசாத் ஆகியோர் கனகச்சிதமான நடிப்பில் மிளிர்கிறார்கள்.
அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு அனைத்து காட்சிகளையும் தனித்துவமான தெரிய பலவிதங்களில் உதவி செய்வதால் படத்திற்கு கூடுதல் பலமாக அமைகிறது.
விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஒகே.
எழுத்து, இயக்கம்-காளிஸ். ஹேக்கர்களை பற்றிய கதை என்பதால் கொஞ்சம் புத்திசாலித்தானமாக யோசித்து திரைக்கதையமைத்து அதில் காதல், நட்பு, செண்டிமெண்ட் என்று அனைத்தையும் ஒட்டு மொத்த கலவையாக கொடுத்திருந்தாலும், இயக்குனர் காளிஸின் கடின உழைப்பால் படம் பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை. நவீன தொழில்நுட்பம் இலவசம் என்று கொடுத்து ஒவ்வொருவரின் அந்தரங்கத்தை எட்டிப் பார்க்கும் கருவியாக எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதை சொல்லுவதில் வெற்றி பெற்றிருக்கிறது.

மொத்தத்தில் அனைவரின் அறிவையும் தட்டி எழுப்பி திறந்து பார்க்கும் சாவியாக த்ரில்லிங்காக இருக்கிறது கீ.

நம்ம பார்வையில் ‘கீ’ படத்துக்கு 3 ஸ்டார் தரலாம்.