கால் டாக்ஸி விமர்சனம்

0
11

கால் டாக்ஸி விமர்சனம்

கால் டாக்ஸிகால் டாக்ஸி டிரைவர்கள் கொல்லப்பட்டு கார்களை கடத்திச் செல்லும் திருட்டுக் கும்பலால் சென்னையில் பதட்டமான சூழ்நிலை ஏற்படுகிறது. கால் டாக்ஸி  டிரைவரான சந்தோஷ்சரவணனின் நண்பரும் இதில் இறந்து விட மன உளைச்சலில் இருக்கும் இவர் கொலையாளிகளை தேடி வருகிறார்.இதை விசாரிக்கும் போலீஸ் மெத்தனமாக செயல்பட, கால் டாக்ஸி டிரைவர்களின் கோரிக்கையை ஏற்று தனிப்படை போலீஸ் விசாரணையில் ஈடுபடுகிறது. சந்தோஷ{ம், தனிப்படைபோலீசும் இரு வேறு திசைகளில் குற்றவாளிகளை தேடிச் செல்கின்றனர். இறுதியில் கொலைக்கான காரணத்தை கண்டுபிடித்தார்களா? குற்றவாளிகளை கைது செய்தார்களா? என்பதே கதையின் முடிவு.

இதில் டிரைவராக நடித்திருக்கும் சந்தோஷ் சரவணன் அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். மற்றும் அஸ்வினி சந்திரசேகர், நான் கடவுள் ராஜேந்திரன், மதன்பாப், இயக்குனர் ஈ.ராமதாஸ், கணேஷ், பசங்க சிவக்குமார், முத்துராமன், சினிமா லீ கார்த்திக், பெல்லி முரளி, சந்திரமௌலி, போராளி திலீபன், சேரன்ராஜ் மற்றும் அஞ்சலி தேவி ஆகியோரின் பாத்திரப்படைப்புகள் நச்சென்று பொருந்துகிறது.
பாணரின் இசையும், பாடல்களும், எம்.ஏ.ராஜதுரையின் ஒளிப்பதிவும் படத்திற்கான அம்சங்களை சரியாக கொடுத்துள்ளனர்.

கார் திருடும் கும்பலை பற்றிய ரகசியங்கள் அவர்களின் நடவடிக்கைகள் குறித்து விரிவாக சொல்லி, கால் டாக்ஸி டிரைவர்களைப் பற்றிய அவநம்பிக்கையை போக்கி அவர்களின் மீது மதிப்பு ஏற்படும் அளவிற்கு திரைக்கதையமைத்து சிறப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் பா.பாண்டியன். படம் மெதுவாக செல்வதால் விறுவிறுப்பு குறைகிறது. இருந்தாலும் இயக்குனரின் முதல் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

மொத்ததத்தில் கால் டாக்ஸி மெதுவான பயணம்.