கார்பன் விமர்சனம்: அனைவருக்கும் சஸ்பென்ஸ் கலந்த விருந்து படைக்கும் கார்பன்

0
66

கார்பன் விமர்சனம்: அனைவருக்கும் சஸ்பென்ஸ் கலந்த விருந்து படைக்கும் கார்பன்

பென்ஞ் மார்க் பிலிம்ஸ் சார்பில் ஆ.பாக்யலட்சுமி, மு.ஆனந்தஜோதி மற்றும் ஆர்.சீனுவாசன் ஆகியோர் தயாரித்திருக்கும் கார்பன் படத்தில் விதார்த், தான்யா பாலகிருஷ்ணன், மாரிமுத்து, மூணார் ரமேஷ், அஜய் நட்ராஜ், வினோத் சாகர், விக்ரம் ஜெகதீஷ், பவுலின், பிச்சைக்காரன் மூர்த்தி, டவுட் செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர். கார்பன் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் ஆர்.சீனுவாசன்.ஒளிப்பதிவு-விவேகானந்த் சந்தோஷம், இசை-சாம்.சி.எஸ், எடிட்டிங்-பிரவீன் கே.எல், ஸ்டண்ட்-கனல் கண்ணன், கலை-ஜெயச்சந்திரன், பாடல்கள்-அருண்பாரதி, தமிழணங்கு, பாடகர்கள்-ஹரிச்சரன், சத்யபிரகாஷ், சின்மயி, நடனம்- விஜி சதிஷ், பிஆர்ஒ- சுரேஷ்சந்திரா, ரேகா.

விதார்த்தின் கனவு நிஜத்தில் மெய்படும். கார்ப்பரேஷனில் குப்பை லாரி ஒட்டும் மாரிமுத்து தன் மகன் விதார்த் போலீஸ் வேலைக்கு செல்ல நினைப்பதை தடை போட்டு, நல்ல வேலையில் சேருமாறு வற்புறுத்துகிறார். இதனால் இருவருக்குள்ளும் நேரிடையாக பேச்சு வார்த்தை இல்லை என்றாலும் வாட்ஸ் ஆப்பில் பேசிக் கொள்வர். தந்தைக்காக தற்காலிகமாக வேலையில் சேரும் விதார்த்திற்கு மீண்டும் கனவு வருகிறது. அதில் தந்தை விபத்து ஏற்படுவது போல்  தெரிகிறது. தந்தையை காப்பாற்ற முயற்சிக்கும் போது விபத்தும் ஏற்பட்டு தந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்பட, விபத்து ஏற்படுத்தியவரை சந்தித்தால் பணம் கிடைக்கும் என்றெண்ணுகிறார். அதற்கான கனவு வர வேண்டும் என்று அந்த நாளையே மறு உருவாக்கம் செய்ய முற்படுகிறார். இதில் வெற்றி பெற்றாரா? கனவு வந்ததா? விபத்தை ஏற்படுத்தியவர் யார்? பணம் கிடைத்து தந்தையை காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.

விதார்த்; தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் வித்தியாசமானதாகவும், யதார்த்தமானதாகவும் இருப்பதால் அவரின் வளர்ச்சிக்கு தடைகற்களாக இல்லாமல் படிக்கற்களாக இருந்து 25 படங்களை சுலபமாக முடித்துள்ளார் என்பதே இவரின் வளர்ச்சிக்கு சிறப்பு.இந்தப் படத்தில் டைம் லூப் கான்சப்டை வைத்து வெற்றி முகத்தோடு களமிறங்கி அடித்து தூள் பரத்தியுள்ளார்.வெல்டன்.

தான்யா பாலகிருஷ்ணன் முதலில் அப்பாவி பெண் பின்னர் அடப்பாவி பெண்ணாக வந்து துணிச்சலான கதாபாத்திரம் பேசப்படும். பாசமிகு அப்பா மாரிமுத்து, போலீஸாக மூணாறு ரமேஷ், செக்யூரிட்டியாக மூர்த்தி, வார்டு பாயாக வினோத் சாகர், டாக்டராக வெங்கட் சுபா, இளநீர் வியாபாரியாக விக்ரம் ஜெகதீஷ், பூக்காரப் பெண்ணாக பவுலின், நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நிதீஷ் வீரா, அஜய் நட்ராஜ் ஆகிய துணை கதாபாத்திரங்கள் விறுவிறுப்பான கதைக்களத்திற்கு தூண் போன்று உறுதியாக நடித்துள்ளனர்.

விவேகானந்த் சந்தோஷத்தின் காட்சிக்கோணங்கள் மாறுபட்ட சிந்தனையோடு கொடுத்திருப்பது அசத்தல் ரகம்.

அருண்பாரதி, தமிழணங்கு பாடல் வரிகளில் சாம்.சி.எஸ் இசையும் சேர்ந்து படத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர்.

எடிட்டிங்-பிரவீன் கே.எல், ஸ்டண்ட்-கனல் கண்ணன், கலை-ஜெயச்சந்திரன் ஆகியோரின் பங்களிப்பு கவனிக்க வைக்கிறது.

டிரிம் டைம் லூப்பில் சிக்கிக்கொள்ளும் மகன் தந்தையை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் எப்படி தனக்கே ஆபத்தாக முடிகிறது என்பதை கனகச்சிதமாக திரைக்கதையமைத்து, அதை எதிர்பாராத திருப்பங்களுடன் கலந்து விறுவிறுப்பாக கொடுத்து வித்தியாசமான கோணத்தில் காட்சிகளை அமைத்து தனித்து நின்று வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் ஆர்.சீனுவாசன். பாராட்டுக்கள்.

மொத்தத்தில் பென்ஞ் மார்க் பிலிம்ஸ் சார்பில் ஆ.பாக்யலட்சுமி, மு.ஆனந்தஜோதி மற்றும் ஆர்.சீனுவாசன் தயாரிப்பில் வெளி வந்திருக்கும் கார்பன் நிஜத்தை உருவாக்கி கனவை நனவாக்கும் டைம் லூப், மாறுபட்ட கோணத்தில் அசத்திடும், அனைவருக்கும் சஸ்பென்ஸ் கலந்த விருந்து படைக்கும்.