கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், விக்ரம், துருவ் விக்ரம், வாணி போஜன் இணையும் ‘சியான் 60’

0
2

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், விக்ரம், துருவ் விக்ரம், வாணி போஜன் இணையும் ‘சியான் 60’

விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படம் ‘சியான் 60’. கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை இயக்க உள்ளார். விக்ரமின் கோப்ரா படத்தை தயாரிக்கும் லலித்குமார் தனது 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் இந்த படத்தையும் தயாரிக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

சன்டிவியில் ஒளிபரப்பாகி மக்களிடம் அதிக வரவேற்பை பெற்ற தெய்வமகள் சீரியலில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்த வாணி போஜன் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை வாணி போஜன் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 3 முதல் டார்ஜிலிங்கில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.