காத்துவாக்குல ரெண்டு காதல் : வைரலாகும் ‘நான் பிழை’ பாடல்!

0
148

காத்துவாக்குல ரெண்டு காதல் : வைரலாகும் ‘நான் பிழை’ பாடல்!

நடிகர்கள் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். இசையமைப்பாளர் அனிருத் பின்னணி இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘நான் பிழை’ பாடல் தற்போது வெளியாகி உள்ளது. மெலடி பாடலாக இது அமைந்துள்ளது. விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுக்கு இடையே நடைபெறும் காதல் காட்சிகளை இந்த பாடல் கடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாடல் வரிகளை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். வீடியோ பாடலாக வெளியாகியுள்ளது, விஜய் சேதுபதி, நயன்தாராவின் அனுபவம் வாய்ந்த நடிப்பு அழகாக வெளிப்பட்டுள்ளது. காதலை தாண்டிய அன்பை பரிமாறும் ஒரு உணர்வுபூர்வமான பாடலாம இது அமைந்துள்ளது.

முன்னதாக இந்த படத்தில் இடம் பெற்றுள்ள TWO பாடல் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி இருந்தது. இந்த பாடல் பலத்த வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.