காதம்பரி விமர்சனம்

0
17

காதம்பரி விமர்சனம்

காட்டுக்குள் டாக்குமென்டரி படம் எடுக்க செல்லும் அருள் மற்றும் நண்பர்கள் சென்ற கார் விபத்தில் சிக்க அருகில் இருக்கும் ஆரவாரமில்லாத வீட்டில் தஞ்சம் அடைகின்றனர். அந்த வீட்டில் இருக்கும் வாய் பேச முடியாத பெரியவர் உதவி செய்தாலும், அவரின் நடவடிக்கை வித்தியாசமாக இருக்கிறது. அதனால் நணபர்கள் அந்த வீட்டை சுற்றிப் பார்க்கும் போது ஒரு மரப்பெட்டியில் சிறுமி ஒருவர் அடைப்பட்டு பூட்டு போட்டு இருப்பதை பார்க்கின்றனர். அந்த சிறுமி பெரியவரின் மகள் என்பதையறிந்து அதிர்ச்சியடையும் நண்பர்கள், அவளை காப்பாற்றி விசாரிக்கின்றனர். அந்த சிறுமி எதுவும் பேசாமல் இருக்க அதன்பின் அடுத்தடுத்து நண்பர்கள் இறக்க நேரிடுகிறது. பின்னர் பெரியவர், சிறுமி என்று வரிசையாக இறக்க, அதற்கு காரணம் காதம்பரி என்பதை அங்கு வரும் போலீஸ்காரர் மூலம் அறிகின்றார் அருள். எதற்காக இந்த கொலைகள் நிகழ்கிறது? ஒருவரை கொன்றால், கொன்றவர் மேல் காதம்பரி ஆவி புகுந்து கொண்டு மற்றவரை ஏன் கொல்ல நினைக்கிறது? இறுதியில் மாட்டிக் கொள்வது யார்? நடந்தது என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
இதில் அருள் (அருள்), காஷிமா ரஃபி ( லின்ஸி), அகிலா நாராயணன் (ருத்ரா), சர்ஜுன் (விக்டர்), நின்மி (ஸ்டெல்லா), பூஷிதா (அனாமிகா), மகாராஜன் (பீம்சிங்), முருகானந்தம் (போலீஸ் கேசவன்) மற்றும் பலர் படத்தின் காட்சிகளுக்கேற்ற கதாபாத்திரங்களாக தங்களால் முடிந்தவரை சிறப்பு செய்திருக்கிறார்கள்.
திகில் நிறைந்த படத்திற்கான அத்தனை அம்சங்களையும் ப்ரித்வி இசையாலும், வி.டி.கே.உதயன் ஒளிப்பதிவாலும் காட்சிக் கோணங்களில் வீட்டிற்குள்ளேயே நடப்பதால் அளவாக கொடுத்துள்ளனர்.
பேய் படத்திற்கான தனிமையான வீடு, நண்பர்கள், காடு என்று படத்தின் கதைக்களத்தை கையாண்டிருந்தாலும் பிளாஷ்பேக் காட்டாமல் வித்தியாசமாக காதம்பரியின் கதையை சொன்னாலும், அதை எடுத்திருக்கும் விதத்தில் பல இடங்களில் லாஜிக்கே இல்லாமல் செல்வதால் படத்தில் ஏற்படும் பயமும், த்ரில்லும் இல்லாததால் கதையின் ஒட்டத்திற்கு தடைகற்களாக இருக்கிறது. ஆனாலும் இயக்குனரின் முதல் முயற்சியில் சிறிய பட்ஜெட் படமென்பதால் தன்னால் முடிந்தவரை பங்களிப்பை கொடுத்து உழைத்திருப்பது தௌ;ளத்தெளிவாக தெரிகிறது.
மொத்தத்தில் அரோமா ஸ்டுடியோஸ் சார்பில் காதம்பரி படம் விறுவிறுப்பு குறைவு.