கவர்ச்சிப் பாடலுக்கு வரவேற்பு: சமந்தா மகிழ்ச்சி

0
60

கவர்ச்சிப் பாடலுக்கு வரவேற்பு : சமந்தா மகிழ்ச்சி

அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்து நேற்று வெளியான புஷ்பா படத்தில் ஒரே பாடலுக்கு கவர்ச்சி ஆடை அணிந்து செக்ஸியான நடன அசைவுகளுடன் நடனமாடி உள்ளார் முன்னணி கதாநாயகி சமந்தா.

இப்பாடல் வெளியீட்டிற்கு முன்பாகவே அனைத்து மொழிகளிலும் ஹிட்டானது. தெலுங்குப் பாடல் மட்டும் ஒரே வாரத்தில் 4 கோடி பார்வைகளை youtube-ல் கடந்துள்ளது, தமிழில் 1 கோடி பார்வைகளையும், ஹிந்தியில் 97 லட்சம் பார்வைகளையும் கன்னடத்தில் 42 லட்சம் பார்வைகளையும், மலையாளத்தில் 15 லட்சம் பார்வைகளையும் இதுவரை பெற்றுள்ளது.

எதிர்பார்த்தது போலவே இப்பாடலுக்கு தியேட்டர்களில் ரசிகர்கள் நடனமாடி கொண்டாடுகிறார்கள். அந்த கொண்டாட்ட வீடியோக்களை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சமந்தா. மற்றொரு பக்கம் இப்படி தியேட்டர்களில் படமாக்கப்படும் பைரசி வீடியோக்களை சமந்தா வெளியிடலாமா என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.