கவச உடை அணிந்தபடி வந்து மனைவியின் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார் அருண்ராஜா காமராஜ்

0
21

உயிரிழந்த தனது மனைவியை கடைசியாக பார்க்க பிபிஇ கிட்டுடன் வந்திருக்கிறார் பாடலாசிரியரும், இயக்குநருமான அருண்ராஜா காமராஜ்.

கவச உடை அணிந்தபடி வந்து மனைவியின் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார் அருண்ராஜா காமராஜ்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அருண்ராஜாவும், அவரது மனைவி சிந்துஜாவும் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் 2018-ல் வெளிவந்த கனா படத்தில் இயக்குனராக அறிமுகமானார் அருண்ராஜா காமராஜ் . இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ’ஆர்டிக்கிள் 15’ படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறார். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அருண்ராஜாவும், அவரது மனைவி சிந்துஜாவும் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி சிந்துஜா மறைந்திருக்கிறார். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அருண்ராஜா பிபிஇ கிட்டுடன் தனது மனைவியின் முகத்தை கடைசியாகப் பார்க்க வந்திருக்கிறார். அவர் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தியதை பார்த்து அருகில் இருந்தவர்கள் மனமுடைந்து போயினர்.

திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், நடிகர் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செத்தியுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “நேர்த்தியான இயக்குனர் – நுட்பமான திரைக்கலைஞர் சகோதரரர் அருண்ராஜா காமராஜ்அவர்களின் மனைவி சிந்துஜா மறைந்தது அறிந்து வேதனையுற்றேன். அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினேன். அருண்ராஜாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய சகோதரி சிந்துஜாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல்” என்று நேரில் மரியாதை செய்ததோடு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதேபோல் சிவகார்த்திகேயனும் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அருண்ராஜா காமராஜ் பிபிஇ கிட்டுடன் தனது மனைவியின் முகத்தை கடைசியாகப் பார்க்க வந்த அந்தப் படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.