‘கல்தா’ திரை விமர்சனம்

0

‘கல்தா’ திரை விமர்சனம்

ரேட்டிங்

மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் சார்பில் மலர்க்கொடி, ரகுபதி மற்றும் செ.ஹரி உத்ரா தயாரித்துள்ள படம் கல்தா.

சிவா நிஷாந்த், மேற்கு தொடர்ச்சி மலை புகழ் ஆண்டனி, ஐரா, திவ்யா, கஜராஜ், அப்புகுட்டி, எஸ்.எம்.டி கருணாநிதி, காக்கா முட்டை சசி, சுரேஷ், முத்து வீரா,தங்கராஜ், ராஜ சிம்மன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்:
எழுத்து இயக்கம் – எஸ்.ஹரி உத்ரா, ஒளிப்பதிவு – பி.வாசு, படத்தொகுப்பு – முத்து முனியசாமி, இசை – கே.ஜெய் கிரிஷ், பாடல்கள் – வைரமுத்து, வித்யா சாகர், கலை இயக்கம் – இன்பா ஆர்ட் பிரகாஷ், சண்டை – கோட்டி, நடனம் – சுரேஷ் எஸ், ஸ்டில்ஸ் – பா. லக்ஷ்மண், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா.

கதை: தமிழ்நாட்டின் ஒரு எல்லையில் இருக்கும் தன்னிலங்காடு கிராமத்தில் பணத்திற்காக கவுன்சிலர் மருத்துவ கழிவுகள் மற்றும் மாமிச கழிவுகளை அந்த கிராமத்தில் கொட்டி குவிக்கிறார்கள். மருத்துவ கழிவுகள் எப்படியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்த இந்த கிராமத்தில் வசிக்கும் நாயகன் சிவா நிஷாந்தின் அப்பா கஜராஜ் மற்றும் ஆண்டனி ஆகியோர் இதை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், கொட்டிய இந்த கழிவுப் பொருட்களின் பாதிப்பினால் ஆண்டனியின் மனைவி உட்பட ஊரில் பலர் இறக்கிறார்கள். இதனால் கோபமடையும் ஆண்டனி மது போதைக்கு அடிமையாகி ஊர் கவுன்சிலரிடம் தகராறு செய்கிறார். கவுன்சிலரோ ஆண்டனியை கொலை செய்து விடுகிறார். இறுதியில் ஊர் மக்கள் இதை எதிர்த்து போராடினார்களா? கழிவுகள் கொட்டுவதை தடுக்க பட்டதா? கவுன்சிலர் என்ன ஆனார்? என்பதே மீதிக்கதை.

கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் சிவா நிஷாந்த் அறிமுக நாயகன் ஒரு புதுமுகம் என்கிற உணர்வே வராமல் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக சண்டைக் காட்சிகளிலும் நடனங்களிலும் முழு கவனம் செலுத்தியுள்ளார்.

மேற்கு தொடர்ச்சி மலை புகழ் ஆண்டனி, ஐரா, திவ்யா, கஜராஜ்,அப்புகுட்டி,  எஸ்.எம்.டி கருணாநிதி, காக்கா முட்டை சசி, சுரேஷ், முத்து வீரா, தங்கராஜ், ராஜ சிம்மன் ஆகியோர் இந்தக் கதையின் ஓட்டத்துக்கு கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

நம்மை கவனிக்க வைக்கும் வாசுவின் ஒளிப்பதிவுக்கு ஜெய் கிரிஷின் இசை கூடுதல் பலம். பாடல்கள் கேட்கும் ரகம். குறிப்பாக வைரமுத்துவின் வரிகளில் ஒலிக்கும் அப்பா பாடல் ரசிக்க வைக்கிறது.

அண்டை மாநிலங்களிலிருந்து வந்து கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால், மக்கள் எந்த அளவுக்கு உடல்ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதையும் மக்கள் படும் துயரத்தையும், அவலத்தையும் நிஜத்தில் இங்கு நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து ஊழல் அரசியல்வாதிகளை தோலுரித்துக் காட்டத் முயற்சித்துள்ளார் இயக்குனர் எஸ்.ஹரி உத்ரா. உண்மையான உழைப்பு ஜெயிக்கும். பாராட்டுக்கள்.

மொத்தத்தில் கமர்ஷியல் கலந்த நல்ல கருத்துக்களை கூறும் இயல்பான படம் ‘கல்தா’.

நம்ம பார்வையில் ‘கல்தா’ படத்துக்கு 2.5 ஸ்டார் தரலாம்.