கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க – செல்வராகவன் – தனுஷ் இணையும் நானே வருவேன்

0
15

கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க – செல்வராகவன் – தனுஷ் இணையும் ‘நானே வருவேன்’

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20-ந் தேதி தொடங்கும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் உருவான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களுக்கு தனி ரசிகர்கள் உண்டு. இந்த நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும்  நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20-ந் தேதி தொடங்கும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் உருவான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களுக்கு தனி ரசிகர்கள் உண்டு. இந்த நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி போன்ற மாஸ்டர் பீஸ்களில் செல்வராகவனுடன் இணைந்து நின்ற யுவனும், ஒளிப்பதிவாளர் அர்விந்த் கிருஷ்ணாவும் நானே வருவேனில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.

செல்வராகவனுடன் தனுஷ் இணையும் போதெல்லாம் ஒரு மேஜிக் நிகழ்ந்திருக்கிறது. ரசிகர்கள் பல ஆண்டுகளாக இந்த அண்ணன் – தம்பி காம்பினேஷனுக்காக காத்திருந்தனர். விரைவில் தனுஷை வைத்து இரு படங்கள் இயக்குவதாக செல்வராகவன் அறிவித்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. முதல் படமாக நானே வருவேன் தயாராகிறது.

ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்குவதாக இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதையடுத்து ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிப்பார் என்கின்றன செய்திகள்.