‘கர்ணன்’ டீசர் ரிலீஸ் குறித்து டுவிட் போட்ட தனுஷ் – கொண்டாட தயாராகும் ரசிகர்கள்

0
19

‘கர்ணன்’ டீசர் ரிலீஸ் குறித்து டுவிட் போட்ட தனுஷ் – கொண்டாட தயாராகும் ரசிகர்கள்

‘கர்ணன்’ படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என நடிகர் தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் நடிகர் தனுஷை வைத்து ‘கர்ணன்’ படத்தை இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக பணியாற்றும் இந்தப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ‘கர்ணன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அண்மையில் படத்தில் இருந்து முதல் பாடலாக ‘கண்டா வரச்சொல்லுங்க.. கர்ணனை கையோட கூட்டி வாருங்க’ என்ற பாடல் வெளியிடப்பட்டது.

நாட்டுப்புறப் பாடகி கிடக்குழி மாரியம்மாளின் குரலில் வெளியான இந்தப்பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதனைத்தொடர்ந்து படத்தின் இராண்டாவது சிங்கள் ட்ராக் பாடலாக ‘பண்டாரத்தி புராணம்’ பாடல் வெளியானது.

இந்தப் பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கர்ணன் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என நடிகர் தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.