கமாக்யா நாரயண் இயக்கத்தில் எடுக்கப்பட்ட “போர்” திரைப்படம் எம் எக்ஸ் பிளேயரில் வெளியீடு
திரைப்பட தயாரிப்பாளர்கள் காமாக்யா நாராயண் சிங்கின் “போர்” படம் எம்.எக்ஸ் பிளேயரில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் பெண்கள் அனைத்து அதிகாரத்தையும் பெறுவதற்கான வலுவான ஆதாரத்தையும் அதே நேரத்தில் கிராமப்புற இந்தியாவின் துப்புரவு பிரச்சினைகளையும் எடுத்துக்காட்டுகிறது.
இப்படத்தைப் பற்றி இயக்குனர் கமாக்யா நாராயண் தெரிவித்துள்ளதாவது:
ஒரு திரைப்படத் தயாரிப்பாளராகவும், சமூகப்பணி மாணவராகவும், உலகத்திலும் இந்தியாவிலும் பயணிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பழங்குடி கலாச்சாரங்களை சேர்ந்தவர்களுடன் பழகுவதற்கான வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. அவர்கள் ஏழைகளாக இருக்கலாம், ஆனால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். பீகாரைச் சார்ந்த “முஷாரஸ்” என்ற சமூகத்தைப் பற்றி இப்படம் விரிவாக பேசுகிறது. இவர்கள் அனைவரது வாழ்க்கையையும் முடிந்தவரை எதார்த்தமாக சித்தரிக்க நாங்கள் முயற்சி செய்துள்ளோம். படத்தை முடிந்தவரை எதார்த்தமாக காண்பிக்கவே எங்கள் குழு முயற்சி செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.
இப்படத்தைப் பற்றி தயாரிப்பாளர் ஏகே சிங் தெரிவித்துள்ளதாவது:
எனக்கு எந்தவித திரைப்பட பின்னணியும் கிடையாது. ஆனால் நான் திரைப்படம் தயாரிக்க ஆசைப்பட்டேன். நான் என்னுடைய சிறு வயதை முழுமையாக கிராமப்புறத்தில் செலவழித்துள்ளேன். நான் ஒரு நல்ல படத்தை தயாரிக்க வேண்டும் என முடிவு செய்த போதுதான் “போர்” திரைப்படத்தின் கதை என்னிடம் வந்தது. இத்திரைக்கதை கிராமப்புற மக்களின் எதார்த்தமான வாழ்க்கையை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. ஆகவே இத்திரைப்படத்தை தயாரிக்க நான் முடிவு செய்தேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் கெய்ரோ சர்வதேச திரைப்பட விழா, இந்திய சர்வதேச திரைப்பட விழா, மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் இப்படம் விமர்சன ரீதியான பாராட்டுகளை பெற்றுள்ளது. இப்படம் ஒட்டாவா இந்திய திரைப்பட விழாவில் சிறந்த இயக்கத்திற்கான விருதையும் பெற்றுள்ளது. இத்திரைப்படம் பீகாரில் உள்ள “முஷாரஸ்” சமூகத்தை சார்ந்த புத்னி என்ற பெண்ணை சுற்றியே உள்ளது, மேலும் அப்பெண் துப்புரவிற்காக ஒரு கழிப்பறையை கட்ட எப்படி முரண்படுகிறார் என்பதை திரைக்கதை காண்பிக்கின்றது எனவும் ஏகே சிங் தெரிவித்துள்ளார்.