கமல்ஹாசன் பிறந்தநாள்: புதிய போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ‘தக் லைப்’ படக்குழு
நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு கமல்ஹாசனின் 234-வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். 37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணையவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகை திரிஷா, நடிகர்கள் துல்கர் சல்மான், ஜெயம்ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு ”தக் லைப்’ என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு நேற்று தெரிவித்திருந்தது. நேற்று படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.
இன்று நடிகர் கமல்ஹாசன் தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கமலுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ‘தக் லைப்’ புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டர் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
A NEW NAME, A NEW HISTORY!#thuglife
➡️https://t.co/f2s709GhTC#KH234 #Ulaganayagan #KamalHaasan #HBDKamalSir #HBDUlaganayagan @ikamalhaasan #ManiRatnam @arrahman #Mahendran @bagapath @actor_jayamravi @trishtrashers @dulQuer @MShenbagamoort3 @RKFI @MadrasTalkies_… pic.twitter.com/zuAGZFtC76
— Raaj Kamal Films International (@RKFI) November 6, 2023