கமலுக்கு வில்லனாகும் ‘ரஜினி ரசிகன்’ யார் தெரியுமா?

0
19

கமலுக்கு வில்லனாகும் ‘ரஜினி ரசிகன்’ யார் தெரியுமா?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் பொங்கலுக்கு வெளியாகிறது. இதனையடுத்து அவர் ‘விக்ரம்’ படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கமல் ஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். இதனை ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது.

நவம்பர் மாதமே இதன் அறிவிப்பு வெளியானாலும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் கமல் ஈடுபட்டுள்ளதால் ஷூட்டிங் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. அதனால் தேர்தலுக்கு பின்னரே விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விக்ரம் படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் ராகவா லாரன்ஸிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். கதை அவருக்கு பிடித்துள்ளதால், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவிர, லாரன்ஸ் தற்போது ‘ருத்ரன்’ படத்தில் பிஸியாக உள்ளார். பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தை, ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து இயக்குகிறார். அதோடு லாரன்ஸ் தீவிர ரஜினி ரசிகர் என அனைவருக்கும் தெரியும், அவர் கமலுடன் இணைந்தால் எப்படி இருக்கும் என்பதை திரையில் காண ஆர்வமாக இருக்கிறார்கள் ரசிகர்கள்.