கபாலி படக்குழுவுக்கு ரஜினி பாராட்டு

0

ரஜினியின் ‘கபாலி’ பட டீசருக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 2 கோடிக்கும் அதிகமானோர் இதை பார்த்து இருக்கிறார்கள். மிகப்பெரிய பாராட்டும் கிடைத்துள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், கலையரசன், மைம்கோபி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ரஜினி இரண்டு கெட் – அப்களில் நடித்து இருக்கிறார்.

‘கபாலி’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஜினியுடன் நடித்த நடிகர் – நடிகைகள் படத்தில் நடித்த போது அவர் தங்களை தட்டிக் கொடுத்து பாராட்டியதையும், அதனால் சிறப்பாக நடித்தையும் தெரிவித்து மகிழ்ந்துள்ளனர்.

ரஜினி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் உடன் நடித்த ஜூனியர் நடிகர் – நடிகைகளிடம் எந்த வித பாகுபாடும் காட்டவில்லை. எங்களுடன் நெருங்கி பழகினார். ஒவ்வொரு காட்சியிலும் அவர்கள் நடிப்பை பாராட்டி உற்சாக மூட்டினார். இதனால் நாங்கள் உற்சாகமாக செயல்பட முடிந்தது என்று தெரிவித்தனர்.

இது மட்டுமல்ல படம் தயாரான பிறகு அதை பார்த்து விட்டு இயக்குனர் பா.ரஞ்சித்தையும் ரஜினி பாராட்டு தெரிவித்து மகிழ்ந்திருக்கிறார்.