‘கன்னி மாடம்’ திரை விமர்சனம்

0

‘கன்னி மாடம்’ திரை விமர்சனம்

ரேட்டிங்

போஸ் வெங்கட் இயக்கத்தில் ஸ்ரீராம்கார்த்திக், சாயா தேவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கன்னி மாடம். இப்படத்தில் ஆடுகளம் நரேன், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹரிஷ் சாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இனியன் ஜெ ஹரிஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இப்படத்தை தயாரித்துள்ளார்.

நேரம் – 2 மணி நேரம் 11 நிமிடம்

கதை:மதுரையில் உள்ள உயர்ந்த சாதி வெறி பிடித்தரின் பணக்கார வீட்டு பையன் கதிருக்கும் (விஷ்ணு ராமசாமி) ஏழை வீட்டு பெண் மலருக்கும் (சாயா தேவி) காதல் மலர்கிறது. இதை அறிந்து ஜாதி வெறியர்கள் மலரை குடும்பத்துடன் கொளுத்தும் முயற்சியில், அவர்கள் தப்பிக்கிறார்கள். இந்த சம்பவத்தை பற்றி அறிந்த காதலன் கதிர் மலரை கலப்பு திருமணம் செய்து கொள்கிறான். பின் மதுரையில் இருந்து ஊரை விட்டு சென்னைக்கு ஓடி வருகிறார்கள். அன்பு (ஸ்ரீPராம் கார்த்திக்), ‘ஆடுகளம்” முருகதாஸ் இருவரும் சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள். அன்பு, மதுரையில் இருந்து தப்பித்து வரும் கதிர், மலர் காதல் ஜோடிக்கு அடைக்கலம் தருகிறார். அவர்களின் நிலையறிந்து அவர்களுக்கு நிறைய உதவிகளை செய்கிறார் அன்பு.
மதுரையிலிருந்து அந்த சாதி வெறி பிடித்த கும்பல் இவர்கள் சென்னையில் இருப்பதை அறிந்து சென்னை வந்து தேடுகிறார்கள். அன்புவின் ஆதரவுடன் வாழ்க்கையை தொடங்கும் காதல் ஜோடி, ஒரு நாள் விபத்தில் கதிர் இறந்து போகிறார். அதன் பின் மலர் என்ன ஆனார்? அன்;பு யார்? சென்னையில் அன்பு ஏன் ஆட்டோ ஓட்டுகிறார்? என்பதே மீதிக்கதை.

ஸ்ரீராம் கார்த்திக்கின் கண்களில் மறைந்திருக்கும்; காதல், கருணை உள்ளம் பளிச்சிடுகிறது. கதையுடன் ஒன்றிய சாயா தேவி கண்களாலேயே அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி நம்மை கவர்ந்துள்ளார். திரைக்கதை ஓட்டத்திற்கு முக்கியமான (கதிர்) கதாபாத்திரத்திற்கான நல்ல தேர்வு விஷ்ணு. மூவரும் உணர்வுபூர்வமாக நடித்துள்ளனர்.

ஆடுகளம் முருகதாஸ், ஹவுஸ் ஓனர் (ரோபா சங்கர் மனைவி) ப்ரியா, நடிகராக சான்ஸ் தேடி அலையும் சூப்பர் குட் சுப்ரமணி, ஸ்ரீPராமின் அப்பாவாக கஜராஜ், ஆட்டோ ஓட்டும் பெண்ணாக நடித்துள்ள வலீனா பிரின்ஸ், தாய் மாமன் , வீடு புரோக்கர், என ஒவ்வொருவரும் தங்கள் சிறப்பான பங்களிப்பை கொடுத்து திரைக்கதை ஓட்டத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர். அனைத்து கதாபாத்திரத்திற்கும் நிச்சயம் ரசிகர்களின் கைத்தட்டல்கள் கிடைக்கும்.

வசனங்கள் எல்லாம் நம்மை சிந்திக்க வைக்கிறது. ஹரி சாயின் இசை, ரிஷால் ஜாய்னியின் படத்தொகுப்பு மற்றும் இனியன் ஜே ஹரிஷின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம் சேர்த்துள்ளது, பாடல்கள் ரசிக்கும் ரகம்.

சின்னத்திரை தொலைக்காட்சியில் அறிமுகமாகி சினிமாவில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து 15 வருடங்களாக போராடிய போஸ் வெங்கட் ‘கன்னி மாடம்” மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இத்தனை ஆண்டு தனக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து சாதி வெறியால் கிராமத்திலிருந்து பயந்து சென்னையில் வாழ ஓடி வந்த ஒரு காதல் ஜோடியின் கதையை கருவாக வைத்து தனது திறமையான திரைக்கதையால் நல்ல தரமான படத்தையும், சமூகத்துக்கு தேவையான கருத்துக்களையும் பதிவு செய்து மக்களை ஈர்க்கிறார். யதார்த்தமான படங்களை தந்த இயக்குனர்கள் மகேந்திரன், பாலுமகேந்திரா வரிசையில் நிச்சயம் போஸ் வெங்கட் இடம் பிடிப்பார்.

மொத்தத்தில் ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் தயாரித்துள்ள ‘கன்னி மாடம்” படத்தை யதார்த்த சினிமா மீது ஈர்ப்பு இருக்கும் அனைத்து தரப்பு மக்கள் கொண்டாடுவார்கள்.

நம்ம பார்வையில் ‘கன்னி மாடம்’ படத்துக்கு 3.5 ஸ்டார் தரலாம்.