கதை பிடித்திருந்தும் ஐஸ்வர்யா ராய் படத்திலிருந்து நடிகர் மாதவன் விலகல்!

0

கதை பிடித்திருந்தும் ஐஸ்வர்யா ராய் படத்திலிருந்து நடிகர் மாதவன் விலகல்!

சென்னை: பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடிக்க வந்த வாய்ப்பில் கதை தனக்கு பிடித்திருந்தும், கால்ஷீட் இல்லாத காரணத்தால் நடிகர் மாதவன் அந்த படத்திலிருந்து விலகியுள்ளார்.

நடிகர் மாதவன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘விக்ரம் வேதா’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. இத்திரைப்படத்தில் அவருடன் விஜய் சேதுபதி, வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

இந்நிலையில் பாலிவுட்டில் அதுல் மஞ்ரேகர் இயக்கத்தில், நடிகை ஐஸ்வர்யா ராய் ஜோடியாக ‘பேனி கான்’ என்ற படத்தில் நடிக்க மாதவனுக்கு வாய்ப்பு வந்தது. அவருக்கு கதையும் பிடித்துப் போய் விட்டது. ஆனாலும் கால்ஷீட் பிரச்சனை காரணமாக மாதவனால் அபபடத்தில் நடிக்க இயலாத நிலை.

இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், ‘பேனிகான்’ படத்தின் கதை எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் கால்ஷீட் கொடுக்க என்னிடம் தேதி இல்லை. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

தற்பொழுது மாதவனுக்கு பதிலாக ஐஸ்வர்யா ராயின் ஜோடியாக ராஜ்குமார் ராவ் என்ற இளம் நடிகர் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.