கணேசாபுரம் விமர்சனம்

0
11

கணேசாபுரம் விமர்சனம்

கணேசாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னா, ராஜ் பிரியன் மற்றும் காசிமாயன் மூவரும் முரட்டுத்தனமாக சுற்றித்திரியும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் மூவரும் பல ஊர்களை சேர்ந்த திருட்டு கும்பல்களை வளர்க்கும் ஜமீனின் கட்டுப்பாட்டில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒருநாள் பஞ்சாயத்தின் போது, ஊர் தலைவர் கயல் பெரேராவை சின்னா அடித்து விடுகிறார். இதனால் கோபமடையும் பெரேராவின் மகன் ராஜசிம்மன், சின்னா மற்றும் நண்பர்கள் அனைவரையும் கொல்ல முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில் நாயகி ரிஷாவை சின்னா காதலிக்கிறார். காதல் அவர்களுடைய வாழ்வில் பல மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
இந்த மாற்றம் அவர்களது வாழ்க்கை என்ன ஆகிறது” ராஜசிம்மன், சின்னா மற்றும் நண்பர்களை கொலை செய்தாரா? என்பது தான் ‘கணேசபுரம்” படத்தின் மீதி கதை.

ஹீரோவாக நடித்திருக்கும் சின்னாவுக்கு இது தான் முதல் படம் என்றாலும், அனுபவம் வாய்ந்த நடிகரைப் போல சிறப்பாக நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ரிஷா ஹரிதாஸ் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஹீரோவின் நண்பராக நடித்திருக்கும் தயாரிப்பாளர் காசிமாயனும் நடிப்பால் கவனிக்க ஈர்க்கிறார். மற்றொரு நண்பராக நடித்திருக்கும் ராஜ்பிரியனும் கசனத்தை ஈர்க்க வைக்கிறார். இரண்டு பேரும் இடைவேளைக்குப் பிறகு கடும் உழைப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
வில்லன்களாக நடித்திருக்கும் ராஜசிம்மன், பசுபதி ராஜ், கயல் பெரரா உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கொடுத்த வேடங்களுக்கு ஏற்ப நடித்து கதைக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ராஜா சாயின் இசையில் பாடல்கள் கேட்கலாம், பின்னணி இசை கதை ஓட்டத்திற்கு உதவுகிறது. பி.வாசுவின் ஒளிப்பதிவு அருமை.

சின்னாவின் கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் வீராங்கன்.கே. நாம் ஏற்கனவே பார்த்த கதைப்போல இருந்தாலும், நட்பு, பகை,காதல், நகைச்சுவை ஆகிய அம்சங்களைக் பின்னணியாக வைத்து திருட்டையே தொழிலாகக் கொண்ட ஒரு சமூகத்தின் சிக்கலை கிராமத்து பின்னணியில பதிவு செய்திருக்கும் இயக்குநர் பாராட்டுக்குரியவர். அதே நேரத்தில் இறுதியில் விறுவிறுப்பிற்கு கொஞ்சம் கத்திரியை கையாண்டிருக்கலாம்.

மொத்தத்தில் சஞ்சய் ஷாம் பிக்சர்ஸ் சார்பில் காசிமாயன் தயாரிப்பில் ஸ்டாண்டர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியிடும் கணேசாபுரம் – பார்க்கலாம்.