‘கஞ்சா பூ கண்ணால’ பாடல் வரிகளுக்கு மன்னிப்பு கேட்டார், பாடலாசிரியர் மணிமாறன்…
நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் விருமன். இந்த படத்தில் ‘கஞ்சா பூ கண்ணால’ என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும், இளைஞர்கள் அதிகம் பேர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வரும் நிலையில், கஞ்சாவை மையப்படுத்தி பாடல் வரிகள் இடம் பெறலாமா என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில், ‘கஞ்சா பூ கண்ணால’ பாடல் வரிகளுக்காக தான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதாக பாடலை எழுதிய பாடலாசிரியர் மணிமாறன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறும்போது, மயக்கும் தன்மைக்காக பெண்ணின் கண்களை கஞ்சா பூவுடன் ஒப்பிட்டதாகவும், கஞ்சாவுடன் ஒப்பிடவில்லை என்று அவர் தெரிவித்தார்.
மேலும், பாடலின் வரிகள் கற்பனைக்காக உவமைப்படுத்தப்பட்டது என்று கூறிய அவர், தான் எழுதியது தவறான வார்த்தைதான் என்றும் கூறினார். இதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.