கசடதபற விமர்சனம்

0
13

கசடதபற விமர்சனம்

ஏழையை காதலிக்கும் பணக்கார பெண்ணின் காதல் கைகூடியதா? தாதா அப்பாவை நம்ப வைத்து ஏமாற்றும் மகனின் பதவி ஆசை நிறைவேறியதா? என்கவுண்டரையே வெறுக்கும் போலீஸ் அதிகாரி மனம் மாறி எடுக்கும் முடிவு என்ன? குறுக்கு வழியில் சம்பாதிக்கும் பணத்தை தக்க வைக்க போராடும் இளைஞனின் குள்ளநரித்தனம் ஜெயித்ததா? வயிற்று வலியால் துடிக்கும் குழந்தையை காப்பாற்ற போராடும் ஏழைத்தாய் சந்திக்கும் கஷ்டங்கள் என்ன? கம்பெனியின் பெயரை காப்பாற்ற தன் தொழிலாளியை பலிகாடாக்கும் முதலாளியின் தந்திரம் பலித்ததா? என்பதே ஆறு கதைகளின் ஒவ்வொன்றின் முடிவு, அடுத்த கதையின் துவக்கமாக இணைந்து வருவதே படத்தின் க்ளைமேக்ஸ்.
இதில் சந்தீப் கிஷன், ஹரீஷ் கல்யாண், சாந்தனு, ரெஜினா கஸண்ட்ரா, ப்ரியா பவானிசங்கர், விஜயலட்சுமி, ப்ரேம்ஜி, வெங்கட் பிரபு, யூகி சேது மற்றும் பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக ஜொலிக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், கிப்ரான், ப்ரேம்ஜி, சாம் சிஎஸ், ஷான் ரோல்டன்; ஆகிய ஆறு இசையமைப்பாளர்கள் தங்கள் பங்களிப்பை அசத்தலாக கொடுத்துள்ளனர்.
எம்.எஸ். பிரபு, விஜய் மில்டன், பாலசுப்ரமணியெம், ஆர்.டி. ராஜசேகர், சக்தி சரவணன், எஸ்.ஆர். கதிர ஆகிய ஆறு ஒளிப்பதிவாளர்கள் காட்சிக் கோணங்கள் மனதில் நிற்க வைத்துவிடுகின்றனர்.
கலை:ஜெயகுமார், சண்டை:திலீப் சுப்பராயன், பாடல்கள்:கங்கை அமரன், சினேகன், முத்தமிழ், உடை-வாசுகி பாஸ்கர், மற்றும் ஆறு எடிட்டர்கள் படத்தின் விறுவிறுப்பான காட்சிகளுக்கு உத்தரவாதம்.
ஒரு கதையில் வரும் கதாபாத்திரங்கள் இன்னொரு கதைக்கு வருவதும், கதையில் ஏற்படும் சிக்கல்களுக்கு இன்னொரு கதையில் ஏற்படும் சம்பவங்களால் தீர்வு ஏற்படுவதும் என்று தொடர்ச்சியாக கதையின் ஒட்டத்தை சிறப்பாக கையாண்டிருக்கிறார்; சிம்புதேவன்.பாராட்டுக்கள்.
மொத்தத்தில் பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பில் வெங்கட் பிரபு தயாரிக்க சிம்பு தேவன் இயக்கத்தில் வெறிவந்துள்ள கசடதபற படம் அசத்தல் ரகம்.