ஓ மை கடவுளே திரை விமர்சனம்

0

ஓ மை கடவுளே திரை விமர்சனம்

ரேட்டிங்

Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு & Happy High Pictures அபிநயா செல்வமுடன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஓ மை கடவுளே”. அசோக்செல்வன் நாயகனாக நடிக்க ரித்திகா சிங் நாயகியாக நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார்.

கதை:
அசோக் செல்வன் (அர்ஜுன்), ரித்திகா சிங் (அனு-செல்லப் பெயர் நூடுல்ஸ் மண்டை), ஷா ரா (மணி) மூவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். தெரியாத ஒருவனை திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்விதை விட தன்னை பற்றி முற்றிலும் அறிந்த தனது நெருங்கிய நண்பனான அசோக் செல்வனை மணந்து ஒரு நல்ல புரிதலுடன் வாழ விரும்பி, என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா? என திடீரென ஒருநாள் அசோக் செல்வனிடம் கேட்கிறார் ரித்திகா சிங். அசோக் செல்வனின்; அரைகுறை சம்மதத்தோடு இருவரும் திருமணம் செய்துக்கொள்கின்றார்கள். இத்தனை வருடங்களாக தோழியாகப் பழகிய ரித்திகா சிங்கை, திருமண வாழ்க்கையில் மனைவியாகப் நினைத்து பழக இயலாமல் தோழியாகவே நினைத்து பழகிவருகிறார். வேலையில்லாமல் இருக்கும் அசோக் செல்வனிற்கு தனது கம்பெனியிலேயே வேலை தருகிறார் ரித்திகாவின் அப்பா எம் எஸ் பாஸ்கர். ஏதோ கடமைக்கு அந்த வேலையை செய்து வந்தாலும், அசோக் செல்வனின் கனவு என்னவோ நடிகராக வருவது தான். ஒருநாள், சிறு வயதிலிருந்து நெருங்கி பழகிய தன் பள்ளி சீனியர் வாணி போஜனை (மீரா அக்கா) திடீரென சந்திக்கிறார் அசோக் செல்வன் (சிறுவயதிலிருந்தே வாணி போஜன் மீது க்ரஷ்). வாணி போஜன் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனனிடம் உதவி இயக்குனராக பணிபுரிவது அசோக் செல்வனுக்கு தெரியவர, தனது நடிகன் ஆசையை அவரிடம் கூறுகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் சகஜமாக பழகுவது, மனைவி ரித்திகா சிங்குக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அப்போது இருவருக்கும் ஏற்படும் வாக்கு வாதத்த்pல் அசோக் செல்வன் என்னை விவாகரத்து செய் என கூற கோபத்தில் ரித்திகா சம்மதம் தெரிவிக்கிறார். எனவே, திருமணமான ஒரு வருடத்துக்குள்ளேயே இருவரும் விவாகரத்து பெற குடும்பநல நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகும்போது, திடீரென கடவுளைச் சந்திக்கும் வாய்ப்பு அசோக் செல்வனுக்குக் கிடைக்கிறது. தான் அவசரப்பட்டு திருமணத்துக்குச் சம்மதித்துவிட்டோமோ என்று புலம்பும் அவருக்கு, அந்த முடிவை மாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி ‘கோல்டன் டிக்கெட்” ஒன்றை தருகின்றனர் கடவுள் விஜய் சேதுபதியும், ரமேஷ் திலக்கும். அதன்பின் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.

இன்றைய நாகரிக உலக இளைஞர்களின் காதலை புதிய வடிவில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் உறவுகளின் வலிமையையும், நட்பின் பெருமையையும் சிறப்பான நடிப்பின் மூலம் வெளிபடுத்தியுள்ளார் அசோக் செல்வன். இனி வரும் காலங்களில் பிஸியான நடிகராக வலம் வருவார் அசோக் செல்வன்.

கதையின் முக்கிய கதாபாத்திரம் நூடுல்ஸ் மண்டை அனு (ரித்திகா சிங்). ஆத்மார்த்தமான நடிப்பின் மூலம் உணர்வுகளை அப்படியே முகத்தில் கச்சிதமாகப் வெளிப்படுத்தி அனு கதாப்பாத்திரத்திற்கு உயிர் தந்திருக்கிறார் ரித்திகா சிங்.

இன்னோரு முக்கிய கதாபாத்திரமாக மீரா அக்காவாக வாணி போஜன். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் அவர் (மீரா அக்கா) கதாபாத்திரத்தை நன்கு புரிந்து மிக அழகாக இயல்பான நடிப்பை வெளிபடுத்தி அனைவரையும் கவர்ந்துள்ளார்.

விஜய் சேதுபதி, சிறப்பு தோற்றத்தில் (கடவுளாக) தன் வழக்கமான, இயல்பான நடிப்பால் மனதில் நிற்கிறார். டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனனும் சிறப்பு தோற்றத்தில் தோன்றுகிறார்.

நண்கனாக வரும் ஷா ரா (மணி), எம்.எஸ்.பாஸ்கர், கஜராஜ், சந்தோஷ் பிரதாப், ரமேஷ் திலக் ஆகியோரும் கதாபாத்திரத்துக்கு கூடுதல் பலம்; சேர்த்துள்ளனர்.

விது அய்யன்னாவின் கலர்ஃபுல் ஒளிப்பதிவும், லியோன் ஜேம்ஸ் இசை மற்றும் பின்னணி இசையும், கொ.சேஷா வரிகளும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பூபதி செல்வராஜ் எடிட்டிங்கில் இன்னும் கொஞ்சம் ஓட்டத்தில் கவனம் செலுத்தியிருந்தால் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் எளிதில் புரியும்.

உறவுகளின் வலிமையையும், நட்பின் பெருமையையும்;, காதல், திருமணம், பிரிவு, கடவுள் என ரசிக்க வைக்கும் களத்தில் அழகான காதல் கதையை சொல்ல முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து.

மொத்தத்தில் சமுதாயத்தில் அதிகரித்துவரும் விவாகரத்துக்கு ஒரு தீர்வு சொல்லி கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் ஏற்படுத்தும் Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் பு. டில்லிபாபு மற்றும் Happy High Pictures அபிநயா செல்வமுடன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஓ மை கடவுளே”.

நம்ம பார்வையில் ‘ஓ மை கடவுளே” படத்துக்கு 3.5 ஸ்டார் தரலாம்.