ஓணான் விமர்சனம்: ஒனான் பழி தீர்க்க துடிக்கும் ஆடு புலி ஆட்டம்

0
107

ஓணான் விமர்சனம்: ஒனான் பழி தீர்க்க துடிக்கும் ஆடு புலி ஆட்டம்

எலிஃபண்ட் ப்ளை எண்டர்டெயின்மெண்ட் சார்பில் பி.ஆர்.ரஞ்சித்குமார் தயாரிப்பில் திருமுருகன் சதாசிவன், ஷில்பா மஞ்சுநாத், காளிவெங்கட், சிங்கம்புலி, சரவணன் சக்தி, சனுஜா சோமந்த், ராஜேஷ்வரி, பூ ராமு, ஷர்மிளா, மாஸ்டர் ஜுபின், பேபி வேதா ஆகியோர் நடித்து ஓணான் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சென்னன்.
ஒளிப்பதிவு-ராஜேஷ்ராமன், இசை-ஆண்டனி அபிரகாம், எடிட்டிங்-இப்ரூ, கலை-சஜித், பாடல் வரிகள்-தனிக்கொடி வி.ராமசாமி, பாடியவர்கள்-கே.எஸ்.சித்ரா, ஸ்வேதா மோகன், சரத், தயாரிப்பு மேற்பார்வை-மன்சூர் வெட்டத்தூர், குட்டி கிருஷ்ணன், ஒப்பனை-ராய் பள்ளிசேரி, உடை-சுகேஷ் தனூர், பிஆர்ஒ-புவன்.

காஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் வேலையில் இருக்கும் காளி வெங்கட் அங்கே திருமுருகனின் மனைவி சனுஜாவை பார்க்கிறார். அவரை அடைய துடிக்கும் காளி வெங்கட் சந்தர்ப்பம் பார்த்து காத்து கொண்டிருக்கிறார். காளி வெங்கட் ஒரு நாள் இரவு சனுஜா தனியாக இருக்க வீட்டிற்கு வந்து பலாத்காரம் செய்ய முற்பட இதில் சனுஜா, மகன், மகள் ஆகியோர் இறந்து விடுகின்றனர். அங்கிருந்து தப்பித்து போகும் காளிவெங்கட் தலைமறைவாகிறார். இந்த கொலைகளை மனநோயாளியாக இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்த திருமுருகன் தான் செய்திருப்பார் என்று குற்றம் சாட்டி போலீஸ் திருமுருகனை பிடித்து தண்டனை கொடுத்து சிறையில் அடைக்கின்றனர். பல வருடங்களுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வரும் திருமுருகன் தன் குடும்பத்தை கொன்ற காளிவெங்கட்டை பழி வாங்க பாபநாசத்திற்கு வருகிறார். காளிவெங்கட் வெளிநாட்டில் வேலை செய்வதை அறிந்து அங்கே அவரது வீட்டிலேயே அடைக்கலமடைந்து அவருடைய தங்கையை மறுமணமும் செய்து கொள்கிறார். இதையறியாக காளிவெங்கட் திருமணம் முடிந்த பிறகு தான் உண்மையான காரணத்தை அறிகிறார்;. அதன் பின் நடக்கும் சம்பவங்கள் என்ன? திருமுருகன் காளிவெங்கட்டை பழி வாங்கினாரா? காளிவெங்கட் திருமுருகனை போட்டுத் தள்ளினாரா? இறுதியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

மனநோயாளியாகவும், சைக்கோ கொலைகாரனாகவும், நல்லவராகவும் வெவ்வேறு விதமாக சித்திரிக்கப்படும் கதாபாத்திரத்தை தேர்ந்த நடிப்பால் உடல் மொழியால் வேறுபடுத்தி உணர்ந்து நடித்துள்ளார் கதாநாயகனான திருமுருகன் சதாசிவன். வில்லனாக இருந்து கதாநாயகனாக ஏறுமுகத்துடன் களமிறங்கியிருக்கிறார்.

வில்லனாக அதிர்ச்சி கொடுக்கும் காளிவெங்கட், வேறொரு பரிமாணத்திலும் பார்ப்பது வித்தியாசமான அனுபவம். அற்புத நடிப்பாற்றலால் உயிர்ப்பித்திருக்கிறார்.

அழகாக அமைதியாக வரும் ஷில்பா மஞ்சுநாத், காமெடி என்ற பெயரில் பேசிக்கொண்டே இருக்கும் சிங்கம்புலி, அடி வாங்கிக்கொண்டு ஒடிவிடும் கணவராக சரவணன் சக்தி, பாசமிகு மனைவியாக நடிப்பால் கவரும் சனுஜா சோமந்த், ராஜேஷ்வரி, பாசக்கார தந்தையாக பூ ராமு, ஷர்மிளா, மாஸ்டர் ஜுபின், பேபி வேதா மிகையில்லா நடிப்பு படத்திற்கு சிறப்பு.

ஒளிப்பதிவு-ராஜேஷ்ராமன், இசை-ஆண்டனி அபிரகாம், எடிட்டிங்-இப்ரூ, கலை-சஜித் அனைவரும் படத்திற்கு பக்கபலமாக பங்களிப்பை தந்து உதவியுள்ளனர்.

முதல் காட்சியில் போலீஸ் ஸ்டேஷனில் தொடங்கும் கதைக்களம்  ஃபிளாஷ்பேக் கதையுடன் படம் நகர்ந்து இறுதியில் பல திருப்பங்களுடன்  சஸ்பென்சை க்ளைமேக்ஸ் வரை கொண்டு சென்று அசத்தலான மேக்கிங்குடன் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சென்னன். இவரின் முதல் முயற்சிக்கும், உழைப்பிற்கும் படத்தை முடிந்த வரை விறுவிறுப்பாக, போராடிக்காமல் கொடுத்திருப்பதிலேயே பாதி வெற்றி பெற்றுவிடுகிறார் இயக்குனர் சென்னன்.

மொத்தத்தில் எலிஃபண்ட் ப்ளை எண்டர்டெயின்மெண்ட் சார்பில் பி.ஆர்.ரஞ்சித்குமார் தயாரிப்பில் ஓணான் பழி தீர்க்க துடிக்கும் ஆடு புலி ஆட்டம்.