ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் விக்ரமின் ‘மகான்’?

0
37

ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் விக்ரமின் ‘மகான்’?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘மகான்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் – துருவ் விக்ரம் ‘மகான்’ படத்தில் இணைந்து நடித்து முடித்துள்ளனர். இந்த ஆண்டின் துவக்கத்தில் கொடைக்கானலில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், நேபாள எல்லை உள்ளிட்ட இடங்களில் நிறைவுப்பெற்றது. சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘மகான்’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் ‘மகான்’ நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகவிருக்கிறது என்றும் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.