ஓடிடி-யில் முன்னணி நடிகைகளுக்கு தொடர் தோல்வி –  ‘தி பேமிலி மேன்’ வெப் தொடரின் இரண்டாம் பாகத்தின் மூலம் ஓடிடி-யில் நடிகை  சமந்தா ஜெயித்துக் காட்டுவாரா!?

0
11

ஓடிடி-யில் முன்னணி நடிகைகளுக்கு தொடர் தோல்வி –  ‘தி பேமிலி மேன்’ வெப் தொடரின் இரண்டாம் பாகத்தின் மூலம் ஓடிடி-யில் நடிகை  சமந்தா ஜெயித்துக் காட்டுவாரா!?

கொரோனா வைரஸ் பரவலால் திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீசாகி வருகின்றன. முதலில் ஜோதிகா நடிப்பில் ‘பொன்மகள் வந்தாள்’ படம் ஓடிடி-யில் வெளியானது. இந்தப் படம் கூட ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து கீர்த்தி சுரேஷ் ‘மிஸ் இந்தியா’, ‘பென்குயின்’ என தான் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்த இரு படங்களை ஓடிடி-யில் வெளியிட்டார். அந்த இரு படங்களுமே படுதோல்வியைத் தழுவின.

அதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் ‘லைவ் டெலிகாஸ்ட்’ வெப் தொடர் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்தத் தொடர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறியது. அதையடுத்து தற்போது தமன்னா நடிப்பில் ‘11 ஹவர்’ என்ற வெப் தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதுவும் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை.

இந்த நிலையில் நடிகை சமந்தா, ‘தி பேமிலி மேன்’ வெப் தொடரின் இரண்டாம் பாகத்தின் மூலம் ஓடிடி-யில் எண்ட்ரி கொடுக்கிறார். பேமிலி மென் வெப்தொடர் முதல் பாகம் நல்ல வரவேற்பைப் பெற்றது.  எனவே இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சமந்தா இந்த வெப்தொடரில் வில்லியாக நடிக்கிறார். சக நடிகைகள் ஓடிடியில் தோல்வியை தழுவினாலும் சமந்தா வெற்றி பெற்றே தீர்வேன் என்று நம்பிக்கையுடன் களம் இறங்கியுள்ளார்.

ஓடிடி தளம் சமந்தாவுக்கு கை கொடுக்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!