ஓடிடி தளத்தில் லாபம்… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி

0
25

ஓடிடி தளத்தில் லாபம்… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் சேதுபதி

2015-ம் ஆண்டு புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் அடுத்ததாக விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார்.

கலையரசன், ஜகபதிபாபு, சாய் தன்ஷிகா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக தடைபட்டிருந்த ‘லாபம்’ படத்தின் டப்பிங் பணிகள் கடந்த ஜூலை மாதத்தில் தொடங்கின. விஜய் சேதுபதி, கலையரசன் உள்ளிட்ட படக்குழுவினர் தங்களது டப்பிங் பணிகளை முடித்ததை அடுத்து படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கடந்த நவம்பர் மாதத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களில் படக்குழு நடத்தியிருக்கும் நிலையில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பெற்றிருப்பதாக நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனால் இத்திரைப்படம் ஓடிடி தளத்தில் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதை மறுத்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, லாபம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகாது. அது நேரடியாக தியேட்டரிகளில் பெரிதாக ரிலீஸ் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.