ஓடிடியில் வெளியானது ஜி.வி பிரகாஷின் செல்ஃபி

0
123

ஓடிடியில் வெளியானது ஜி.வி பிரகாஷின் செல்ஃபி

ஜி.வி பிரகாஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான முதல் படம் ‘செல்ஃபி’. இயக்குநர் வெற்றிமாறனின் உதவி இயக்குநர் மதிமாறன் இயக்கியுள்ள இப்படம் கடந்த மாதம் வெளியாகி பாராட்டுக்களைக் குவித்தது. வில்லனாக நடிப்பில் மிரட்டியிருந்தார் கெளதம் மேனன். வர்ஷா பொல்லம்மா, வாகை சந்திரசேகர், குணநிதி உள்ளிட்டோர் நடிப்பில் கவனம் ஈர்த்திருந்தார்கள். நண்பர்களுடன் சேர்ந்து மாணவர் சேர்க்கைக்காக ஏஜெண்ட்டாய் மாறி, பெற்றோர்களிடம் பேசி ஆள் பிடிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜிவி பிரகாஷ். பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் நடக்கும் கல்விக் கொள்ளைப் பற்றி விழிப்புணர்வூட்டி முதல் படத்திலேயே கவனம் ஈர்த்திருந்தார் இயக்குநர் மதிமாறன். ஜி.வி பிரகாஷ் இசையமைக்க விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பாராட்டுக்களைக் குவித்த இந்தப் படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை ஆஹா தமிழ் ஓடிடி தளம் கைப்பற்றியிருந்தது. படம் வெளியாகி ஒரு மாதம் கழித்து தற்போது ஆஹா தமிழ் ஓடிடியில் ’செல்ஃபி’ வெளியாகியுள்ளது. இதனை, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.