ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா

0
77

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்- டிராமா

நடிகர் கிஷோர், சார்லி , நகுலன் வின்சென்ட், ஜெய்பாலா நடித்திருக்கும்  இந்த திரைப்படம் இந்திய சினிமாவிக் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் கமர்சியல் படம் .
எட்டு மணி நேரத்தில் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
நூற்றி எண்பது நாட்கள் நடிப்பு மற்றும் தொழில்நுட்ப ரிகர்சல் செய்து அதன் பின்னர் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது.
படத்தின் இயக்குனர் அஜூ இதுபற்றி கூறுகையில்…
கிஷோர் , சார்லி போன்ற அனுபவமிக்க நடிகர்கள் இப்படிப்பட்ட சவாலான படப்பிடிப்பிற்கு ஒத்துழைத்து நடித்ததே இந்த படம் வெற்றிகரமாக வந்திருக்கிறது. நாங்கள் நினைத்ததைவிட பிரமாதமாக வந்திருக்கிறது.
ஒரே  ஷாட்டில் படமாக்குவது எளிதல்ல,  அதுவும் ஒரு கமர்சியல் படத்தில் இந்த முயற்சி பெரும் சவாலானது.
எனது குழுவுனரின் முழு ஒத்துழைப்பாலும், நடிகர்களின் முழு அற்பணிப்பாலும் இந்த முயற்சி மிக சிறப்பாக வந்திருக்கிறது. படம் பார்ப்பவர்களுக்கு இது புது அனுபவத்தைத்தரும் என்கிறார்.