‘ஒரு கிடாயின் கருணை மனு’ பட இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார்

0
207

‘ஒரு கிடாயின் கருணை மனு’ பட இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார்

‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுரேஷ் சங்கையா. கடந்த 2017-ம் ஆண்டு விதார்த் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரேம்ஜி நடிப்பில் அவர் இயக்கிய ‘சத்திய சோதனை’ படமும் கவனம் பெற்றது.

இந்த நிலையில் இயக்குநர் சுரேஷ் சங்கையா உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த ஒரு மாதமாக மஞ்சள் காமாலை நோய் காரணமாக அவதிப்பட்டு வந்த சுரேஷ் சங்கையா, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கல்லீரல் பிரச்சினையும் அவருக்கு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இயக்குனர் சுரேஷ் சங்கையாவின் திடீர் மறைவு திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.