ஐஸ்வர்யாவை வாழ்த்திய தனுஷ்… அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தற்போது ‘பயணி’ என்ற இசை ஆல்பம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த இசை ஆல்பம் தமிழில் ‘பயணி’, தெலுங்கில் ‘சஞ்சாரி’, மலையாளத்தில் ‘யாத்ரக்காரன்’, இந்தியில் ‘முசாபிர்’ என்ற பெயரில் தயாராகி உள்ளது.
இந்த ‘பயணி’ இசை ஆல்பத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விவேகா பாடல் வரிகள் எழுதியுள்ளார். இந்த பாடலை நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டார். தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியாக வலம் வந்த தனுஷ்- ஐஸ்வர்யா, கடந்த மாதம் பிரிய போவதாக அறிவித்து சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதன் மூலம் அவர்களது 18 வருட திருமண வாழ்க்கை முறிந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினர்.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பயணி இசை ஆல்பத்தை பகிர்ந்து, ஐஸ்வர்யாவை தோழி என குறிப்பிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில், தனது இசை ஆல்பத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்த தனுஷுக்கு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
Thank you Dhanush….Godspeed https://t.co/XyP9lmnX3P
— Aishwaryaa.R.Dhanush (@ash_r_dhanush) March 17, 2022