Home Cinema ஐந்து மொழிகளில் 1500 திரையரங்குகளில் வெளியான ‘சக்ரா’ ஐந்து மொழிகளில் 1500 திரையரங்குகளில் வெளியான ‘சக்ரா’
அறிமுக இயக்குநர் எம்.எஸ்.ஆனந்த் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் ‘சக்ரா’ திரைப்படம் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது.
இதில் ஹீரோயினாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா நடிக்க, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், இன்று (பிப்.19) உலகம் முழுவதும் சுமார் 1500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.