ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும் – எஸ்பிபிக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல்
ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும் என எஸ்பிபிக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட எஸ்.பி.பி. தான் நலமுடன் இருப்பதாகவும், லேசான அறிகுறி ஏற்பட்டதால் சிகிச்சை பெற மருத்துவமனையில் சேர்ந்ததாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 50 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த எஸ்பிபி இன்று மதியம் 1.04 மணிக்கு காலமானார். அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
எஸ்பிபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவரது நண்பரும், நடிகருமான கமல்ஹாசன், அன்னைய்யா S.P.B அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும் என குறிப்பிட்டுள்ளார். அது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அன்னைய்யா S.P.B அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு.
ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும். pic.twitter.com/9P4FGJSL4T
— Kamal Haasan (@ikamalhaasan) September 25, 2020