ஏப்ரல் 14-ல் வெளியாகும் அமீர்கானின் ‘லால் சிங் சட்டா’: அதிகாரபூர்வ அறிவிப்பு

0
85

ஏப்ரல் 14-ல் வெளியாகும் அமீர்கானின் ‘லால் சிங் சட்டா’: அதிகாரபூர்வ அறிவிப்பு

ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸ் நடிப்பில் கடந்த 1994-ஆம் ஆண்டு வெளியாகி ஆஸ்கார் விருதுகளைக் குவித்த ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தினை அதிகாரபூர்வமாக ‘லால் சிங் சட்டா’வாக ரீமேக் செய்துள்ளார் நடிகர் அமீர்கான். வயகாம் 18 மோஷன் பிக்சர்ஸுடன், அமீர்கானும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை அத்வைத் சந்தன் இயக்கி முடித்துள்ளார்.

அமீர்கானின் நண்பராக நாக சைதன்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கரீனா கபூர், மோனா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏற்கனவே, இப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என்று அமீர்கான் பேட்டிகளில் குறிப்பிட்டிருந்தார். அதே, ஏப்ரல் 14 ஆம் தேதி யஷ்ஷின் ‘கேஜிஎஃப் 2’ படமும் வெளியாவதால் அமீர்கான் மன்னிப்பும் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், ’லால் சிங் சட்டா’ படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

இந்த நிலையில், தற்போது அமீர்கான் புரொடொக்‌ஷன் ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி ‘லால் சிங் சட்டா’ வெளியாகிறது என்று மீண்டும் உறுதி செய்துள்ளார் நடிகர் அமீர்கான்.

https://twitter.com/AKPPL_Official/status/1484458453254893573