ஏப்ரல் 1-ல் ‘பீஸ்ட்’ படத்தின் டீசர் ..?

0
85

ஏப்ரல் 1-ல் ‘பீஸ்ட்’ படத்தின் டீசர் ..?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகராக திகழும் விஜய் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் .இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 13ம் தேதி வெளியாகவுள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தது. இப்படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது.

இந்நிலையில் சட்டையில் ரத்த கறையுடன் கையில் துப்பாக்கி வைத்திருக்கும் புகைப்படம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.. இந்த புகைப்படம்,பீஸ்ட் படத்தின் டெஸ்ட் ஷூட்டில் எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘பீஸ்ட் ‘ படத்தின் டீசரை வருகிற ஏப்ரல் 1-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.