ஏகாலி படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ஜெசிகா பவ்லின்

0

ஏகாலி படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ஜெசிகா பவ்லின்

ஒரு நடிகையை அறிமுகப் படுத்தும் போது அழகான நடிகை என்ற வரையரைக்குள் மட்டும் நிறுத்தி விடக்கூடாது. நன்றாக நடிக்கக் கூடிய அழகான நடிகை என்று தான் சொல்ல வேண்டும். சொல்ல வேண்டும் என்பதை விட அப்படிச் சொல்வதற்கான தரத்தோடு அந்த நடிகை இருக்க வேண்டும். அப்படியான தரத்தோடு இருக்கிறார் நடிகை ஜெசிகா பவ்லின்.

இவர் அறிமுகம் தேவையில்லாத திருமுகம். ஏற்கெனவே துப்பறிவாளன் படத்தில் கவனிக்கக் கூடிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ராட்சசன் படத்திலும் தன் நடிப்பை அழுத்தமாக பதிவு செய்திருந்தார். தற்போது நடிகர் சூரியின் தங்கையாக சுசீந்திரன் இயக்கும் ஏஞ்சலினா படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் இரண்டு படங்களில் தடம் பதித்த ஜெசிகா பவ்லின் தற்போது ஏகாலி படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அந்தப்படத்தைத் தொடர்ந்து இனி அதிகப் படங்களில் கதாநாயகியாக அவர் வலம் வருவார். அதற்கான சாத்தியங்களோடு ஏகாலி படமும் படத்தில் அவரது நடிப்பும் சிறப்பாக வந்திருக்கிறதாம்.