எஸ்.எஸ்.ட்ரீம் கலர்ஸ் நிறுவனம் சார்பில் நடன மாஸ்டர் சுவர்ணா தயாரித்து, இயக்கிய “நாதிரு தின்னா”
பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணத்திலும் , காதலித்து இணையும் திருமணத்திலும் நடைபெறும் குடும்ப சிக்கல்களை வைத்து இளமை ததும்ப நகைச்சுவையுடன் கூடிய ஒரு வித்தியாசமான படத்தை நடன மாஸ்டர் சுவர்ணா இயக்கி உள்ளார்.
இப்படத்திற்காக நான்கு மாநிலங்களில் நட்சத்திர தேர்வு நடத்தினார். இதில் தமிழகம், ஆந்திரா, ஒடிசா, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்களை தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளார்.
சபயாச்சி மிஸ்ரா, ஷ்யாம், மகி, ராகுல் நால்வருடன் ராதிகா ப்ரீத்தி, விஜயலட்சுமி, ஹரிகா, ரக்ஷா, அப்பாஜி ஆகியோருடன் தருண் மாஸ்டரும் நடித்துள்ளார். பி.ஆர்.ஒ: விஜயமுரளி
ஸ்ரீதர் நர்லா ஒளிப்பதிவு செய்ய வின்சென்ட் ஜெயராஜ், விஜயகுமார் இருவரின் பாடல்களுக்கு முரளீதர் ராகி இசையமைத்துள்ளார்.
நடன மாஸ்டராக 300க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய சுவர்னா ” நாதிரு தின்னா” படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி , நடன பயிற்சி அளித்து எஸ்.எஸ்.ட்ரீம் கலர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து தமது முதல் படமாக இயக்கி உள்ளார்.
லட்சுமி , பானுமதி, ரேவதி, சுகாஷினி, லட்சுமி ராமகிருஷ்னா ஆகிய பெண் இயக்குனர்கள் வரிசையில் சுவப்னாவும் சேருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.