எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா ரணாவத் மரியாதை

0
14

எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா ரணாவத் மரியாதை

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா, எம் ஜி ஆர், கலைஞர் நினைவிடங்களில் நடிகை கங்கனா ரனாவத் மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாஅவின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள தலைவி படத்தில் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார்.

வரும் பத்தாம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இன்று சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் கங்கனா மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து எம் ஜி ஆர், கலைஞர் நினைவிடங்களிலும் மலர் வலையம் வைத்து கங்கனா மரியாதை செலுத்தினார். தலைவி படத்தின் இயக்குனர் விஜயும் அவர் உடன் இருந்தார்.