எப்.ஐ.ஆர். விமர்சனம் : எப்.ஐ.ஆர். படம் டீம் ஒர்க்கில் வென்ற ஒரு ஆக்சன் நிறைந்த திரில்லர் படம்

0
74

எப்.ஐ.ஆர். விமர்சனம் : எப்.ஐ.ஆர். படம் டீம் ஒர்க்கில் வென்ற ஒரு ஆக்சன் நிறைந்த திரில்லர் படம்

ஏஎ ளவரனழைண தயாரிப்பில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் எப்.ஐ.ஆர்.  இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மனு ஆனந்த் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் வாசுதேவ் மேனன், நடிகை ரைசா வில்சன், ரேபா மோனிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு அஸ்வத் இசையமைத்துள்ளார். கிருமி புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பு செய்துள்ளார். மக்கள் தொடர்பு AIM சதீஷ்.

சென்னையில் கெமிக்கல் எஞ்ஜினியரிங் முடித்து விட்டு வேலைக்காக பல கம்பெனிகளில் ஏறிக் கொண்டிருக்கிறார் விஷ்ணு விஷால் (இர்பான் அகமது). இவர் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் வேலை கிடைக்காமல் இருக்கிறது. இதனால் தனியார் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றுகிறார். இதே நேரம் அபு பக்கர் என்னும் தீவிரவாதியை தேசிய புலனாய்வு நிறுவனம் தேடி வருகிறது. இந்நிலையில் விஷ்ணு விஷாலின் செல்போன் விமான நிலையத்தில் காணாமல் போகிறது. இந்த செல்போனை வைத்து விமான நிலையம் அருகே வெடிகுண்டு வெடிக்கிறது. இதையடுத்து தேசிய புலனாய்வு நிறுவனத்தால் தேடப்படும் அபு பக்கர், விஷ்ணு விஷால்தான் என்று எண்ணி கைது செய்யப்படுகிறார். சாட்சிகளும் தடயங்களும் இவருக்கு எதிராக இருக்க தீவிரவாத அமைப்பின் தலைவர் என்று முத்திரைக் குத்தப்படுகிறார். விஷ்ணு விஷால் யார்? தன் மீது சுமத்தப்பட்ட பழியிலிருந்து மீண்டாரா? உண்மையான தீவிரவாதி அபு பக்கர் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

இர்பான் அகமது என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஷ்ணு விஷால் முஸ்லீம் இளைஞராக தன்னை அப்படியே மாற்றிக்கொண்டு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியள்ளார். ஆக்ஷனில் வேகமும், அம்மாவுடனான பாசத்திலும் நடிப்பில் மிரட்டி அற்புதமான நடிகராக முன்னேறி இருக்கிறார் விஷ்ணு விஷால். இந்தப் படத்தில் நடித்திருப்பதுடன் இதனை பிரம்மாண்டமாக தயாரித்தும் இருக்கிறார் விஷ்ணு விஷால். அந்தத் துணிச்சலுக்கு முதலில் பாராட்டுக்கள்.

என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு நிறுவனம்)  தலைமை அதிகாரியாக வரும் கௌதம் மேனன் விஷ்ணு விஷாலுக்கு இணையாக தனக்கே உரிய பாணியில் ஸ்டைலிஷாக பேசி மிடுக்கான நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

என்.ஐ.ஏ.வின் மற்றொரு அதிகாரிகளாக வரும் ரைசா வில்சனுக்கு அழுத்தமான கதாபாத்திரம். ரைசா வில்சனும், ரெபா மோனிகாஜான் ஆகியோர் ஆக்ஷனில் கலக்கி இருக்கிறார்கள்.

வழக்கறிஞராக வரும் மஞ்சிமா மோகன் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிய ப்ளஸ்.
அஸ்வத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் அசத்தியுள்ளார் அஸ்வத்.

ஒளிப்பதிவாளர் அருள் வின்செண்ட் கதைக்கு ஏற்றார் போல் சிறப்பாக அமைத்து கடுமையாக உழைத்திருக்கிறார்.

துப்பறியும் ஆக்ஷன் கதையை மையமாக வைத்து படம் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக நகர்த்தி, முஸ்லிம் மதத்தினரை சேர்ந்தவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் இல்லை என்ற கருத்தை சிறப்பான திரைக்கதை அமைத்து விஷ்ணு விஷால் கதாபாத்திரத்தின் மூலம் திறமையாக வேலை வாங்கி மேக்கிங்கில் தனித்துவத்தை வெளிக்காட்டி படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மனு ஆனந்த்.

மொத்தத்தில் Vv studioz தயாரிப்பில் நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து, உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிட்டுள்ள எப்.ஐ.ஆர். படம் டீம் ஒர்க்கில் வென்ற ஒரு ஆக்சன் நிறைந்த திரில்லர் படம்.