எப்போதெல்லாம் நான் சற்று சோர்வாக இருக்கிறேனோ அந்த சமயத்தில் கார்த்தி அண்ணா என்னை உற்சாகப்படுத்துவார் – மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்  எஸ்.ஆர்.பிரபு

0
172

எப்போதெல்லாம் நான் சற்று சோர்வாக இருக்கிறேனோ அந்த சமயத்தில் கார்த்தி அண்ணா என்னை உற்சாகப்படுத்துவார் – மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்  எஸ்.ஆர்.பிரபு

ஜப்பான் டிரைலர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது, “இந்த படத்திற்காக தங்களது கடின உழைப்பையும் ஒட்டு மொத்த ஆதரவையும் வழங்கிய மொத்த படக்குழுவிற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கார்த்தி அண்ணாவின் 25-வது திரைப்படத்தை தயாரித்திருப்பதே மிகப்பெரிய கௌரவம் என்பதுடன் எங்களது முதல் திரைப்படத்தையும் கூட அவரை வைத்தே தயாரித்து இருக்கிறோம். எப்போதெல்லாம் நான் சற்று சோர்வாக இருக்கிறேனோ அந்த சமயத்தில் அவர் என்னை உற்சாகப்படுத்துவார். இந்த தீபாவளிக்கு வெளியாகும் ஜப்பான் திரைப்படம் குடும்பங்களுடன் பொழுதுபோக்க சிறந்த படமாக இருக்கும்” என்றார்.