என்ன சொல்ல போகிறாய் விமர்சனம்: என்ன சொல்ல போகிறாய் கேள்விக்கு ரசிகர்களிடம் விடை கிடைக்காத முற்றுப்புள்ளியாக தெரிகிறது
ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ரவீந்திரன் தயாரித்திருக்கும் என்ன சொல்ல போகிறாய் படத்தில் அஸ்வின்குமார் லட்சுமிகாந்தன், தேஜுஅஷ்வினி, அவந்திகா மிஷ்ரா, புகழ், டெல்லிகணேஷ், சுவாமிநாதன், சுப்பு பஞ்சு, பிரியதர்ஷினி ராஜ்குமார், ஹரிப்பிரியா, ஷாலினி சரோஜ், பிரதீப், டி.எம்.கார்த்திக், இந்துமதி, வைத்தியநான், பத்மநாபன், சினேகா குமார், ஜெய், பூஜா, ஸ்ரீநிதரி, டாங்கிலி ஜம்போ, வைஷ்ணவி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் கதையை எழுதி, இயக்கி இருக்கிறார், ஹரிஹரன். ஒளிப்பதிவினை ரிச்சர்ட் நாதன்; செய்து இருக்கிறார். விவேக்-மெர்வின் இசை அமைத்து இருக்கிறார், மதிவதனன் எடிட்டிங் செய்துள்ளார். கலை-துரைராஜ், வசனம்-பாலகுமாரன், பாடல்வரிகள்-கு.கார்த்திக், மாதிவன், பிரகாஷ் பிரான்சிஸ், நடனம்-பிருந்தா, மக்கள் தொடர்பு- சுரேஷ் சந்திரா, ரேகா.
ரேடியோ ஆர்.ஜேவான விக்ரம் பிடித்த பெண்ணாக தேடி அஞ்சலியை மணம் முடிக்க சம்மதிக்கிறார். அஞ்சலி காதல் கதைகயை எழுதும் புகழ்மிக்க எழுத்தாளர் என்பதால் காதல் தோல்வி கண்டவர் அஸ்வின் என்றெண்ணி திருமணத்திற்கு ஒகே. சொல்கிறார். அதனால் விக்ரம் உடனடியாக காதலியாக ப்ரீத்தியை நடிக்க வைக்கிறார். ப்ரீத்தி ஆசிரியராகவும் இருந்து கொண்டு பகுதி நேரத்தில் நாடக நடிகையாக சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு மிக்கவர். விக்ரமிற்கு நடிக்க சம்மதம் கொடுத்துவிட்டு இருவரையும் அடிக்கடி சந்திக்க நேரிடுகிறது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக ப்ரீத்தி விக்ரமை காதலிக்க தொடங்குகிறார். விக்ரமும் இதே நிலைமை ஏற்பட, யாரை திருமணம் செய்து கொள்வது என்ற குழப்பத்தில் தவிக்கிறார். விக்ரம்-அஞ்சலியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ப்ரீத்தி உறுதியாக சொல்லிவிட்டு வெளிநாடு சென்று விடுகிறார். இறுதியில் என்ன ஆனது? விக்ரம்-அஞ்சலி திருமணம் நடந்ததா? தடை பட்டதா? ப்ரீத்தியின் காதல் ஜெயித்ததா? என்பதே மீதிக்கதை.
அறிமுக நாயகனாக அஸ்வின்குமார் லட்சுமிகாந்தன் முகத்தையும், சிரிப்பையும் வைத்து முடிந்தவரை இளவுகளின் மனதை கவர்கிறார். அழகும், இளமையும், தேர்ந்த நடிப்பில் காதலியாக தேஜுஅஷ்வினி ஜொலிக்கிறார். எழுத்தாளராக அவந்திகா மிஷ்ரா சிறப்பான பங்களிப்பு. காமெடி என்ற பெயருக்காக புகழ் இன்னும் உழைக்க வேண்டும்.
டெல்லிகணேஷ், சுவாமிநாதன், சுப்பு பஞ்சு, பிரியதர்ஷினி ராஜ்குமார், ஹரிப்பிரியா, ஷாலினி சரோஜ், பிரதீப், டி.எம்.கார்த்திக், இந்துமதி, வைத்தியநான், பத்மநாபன், சினேகா குமார், ஜெய், பூஜா, ஸ்ரீநிதரி, டாங்கிலி ஜம்போ, வைஷ்ணவி மற்றும் பலர் படத்தின் பக்கமேளங்கள்.
ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவு அசத்தலுடன் காட்சிக்கோணங்களை அமைத்து மனதில் நின்று விடுகிறார்.
விவேக்-மெர்வின் இசை படத்திற்கு பிடிமானத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறது.
பாலகுமாரன் வசனமும், மதிவதனின் படத்தொகுப்பும் கொஞ்சம் சுறுக்கமாக கொடுத்து அசதியை போக்கியிருக்கலாம்.
மூன்று பேரின் கனவுகள், ஆசைகளை காதலுடன் இணைத்து முக்கோண காதல் கதையாக இளமை துள்ளலுடன் கொடுக்க நினைத்து வசனங்களாலும், காட்சிகளாலும் தோய்வை ஏற்படுத்தியிருப்பதை இயக்குனர் ஹரிஹரன் கொஞ்சம் சரி செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
மொத்தத்தில் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ரவீந்திரன் தயாரித்திருக்கும் என்ன சொல்ல போகிறாய் கேள்விக்கு ரசிகர்களிடம் விடை கிடைக்காத முற்றுப்புள்ளியாக தெரிகிறது.