என்னைக் கடித்தது விஷப் பாம்புதான் – சல்மான் பகீர்!

0
128

என்னைக் கடித்தது விஷப் பாம்புதான் – சல்மான் பகீர்!

தன்னை கடித்தது விஷப் பாம்புதான் என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் விளக்கம் அளித்துள்ளார்.

பாலிவுட் முன்ணனி நடிகரான சல்மான் கான், தனது 56வது பிறந்த தினத்தை கொண்டாடுவதற்காக மகாராஷ்டிராவின் ராய்கட் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு தோட்ட வேலையில் ஈடுப்பட்டிருந்த போது திடீரென பாம்பு ஒன்று கடித்தது. உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சல்மான் கானுக்கு பாம்பு கடித்த செய்தியை அறிந்த ரசிகர்கள், அவர் குணமடைய பிரார்த்தனை செய்து வந்தனர்.

இந்நிலையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சல்மான் கான், தன்னை கடித்தது விஷப் பாம்புதான் என விளக்கம் அளித்துள்ளார். பண்ணை வீட்டிற்கு நுழைந்த பாம்பை, குச்சியால் விரட்ட முயன்றதாகவும், அந்தப் பாம்பு தனது கையில் 3 முறை கடித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், 6 மணிநேரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியதாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, இன்று தனது பிறந்த நாளை அதே பண்ணை வீட்டில் நடிகர் சல்மான் கான் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவரது வீட்டின் முன் ரசிகர்கள் திரண்டு வருகின்றனர்.