எதற்கும் துணிந்தவன் : வெறிச்சோடிய நாமக்கல் திரையரங்குகள்!

0
144

எதற்கும் துணிந்தவன் : வெறிச்சோடிய நாமக்கல் திரையரங்குகள்!

‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை திரையிடக் கூடாது என பாமகவினர் வலியுறுத்திய நிலையில், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படக் கூடாது என நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரசிகர்களின் கூட்டத்தை விட போலீசாரின் கூட்டமே அதிகளவில் காணப்பட்டது

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியானது. சென்னை உட்பட பெரிய மாவட்டங்களில் அதிகாலை சிறப்பு காட்சிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டாலும் சிறிய மாவட்டங்களில் ரசிகர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் 12 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. ஆனால், ரசிகர்களின் வருகை இல்லாததால் சிறப்புக் காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. முதல் காட்சி காலை 10.30 மணிக்கு திரையிடப்பட்டது. ஆனாலும் ரசிகர்களின் கூட்டம் மிக குறைவாகவே காணப்பட்டது.

இதற்கிடையில் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை திரையிடக் கூடாது என பாமகவினர் வலியுறுத்திய நிலையில், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படக் கூடாது என மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டத்தை விட போலீசாரின் கூட்டமே அதிகளவில் காணப்பட்டது