எட்டர்னல்ஸ் விமர்சனம்

0
69

எட்டர்னல்ஸ் விமர்சனம்

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் 26 வது படத்தை பாட்ரிக் பர்லீ, ரியான் ஃபிர்போ மற்றும் காஸ் ஃபிர்போ ஆகியோரின் திரைக்கதையில் சோலோ ஜாவோ இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் ஜெம்மா சான், ரிச்சர்ட் ஹாடன், குமயில் நன்ஜியானி, லியா மெக்ஹக், பிரையன் டைரி ஹென்றி, லாரன் ரிட்லாஃப், பாரி கியோகன், டான் லீ, ஹரிஷ் பட்டேல், கிட் ஹரிங்டன், சல்மா ஹயக் மற்றும் ஏஞ்சலினா ஜோலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

ஒலிம்பியா கிரகத்திலிருந்து அரிஷம் அனுப்பிய சக்திகளைக் கொண்ட பழங்கால வேற்றுகிரகவாசிகள் எடர்னல்ஸ் 7000 ஆண்டுகளாக பூமியில் ரகசியமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் 7,000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தாலும்   கடவுளான அரிஷேம் அவர்களை இன்னும் திரும்ப அழைக்கவில்லை என்பதால் இன்னும் பூமியில் மனிதர்களாக மறைந்து வாழ்கிறார்கள். மனிதர்களை அழிக்க டிவியேண்ட்ஸ் மீண்டும் வர அவர்களை அழிக்க பத்து பேர் கொண்ட எடர்னஸ்ஸ் தங்கள் சக்திகளை ஒன்றாக இணைக்க முயற்சி செய்கிறார்கள். இதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா? டிவியண்ட்ஸை அழித்தார்களா? தங்களுக்குள்ளே வேறுபாடுகளை கலைந்து இணைந்தார்களா? என்பதேமீதிக்கதை.

ஜாவோ செர்சி (சான்), இக்ரிஸ் (ஹாடன்), ஸ்ப்ரைட் (மெக்ஹக்), தேனா (ஜோலி), கில்கமேஷ் (டாங்-சியோக்), கிங்கோ (நஞ்சியானி), பாஸ்டோஸ் (டைரி ஹென்றி), மக்காரி (ரிட்லோஃப்), ட்ரூக் (கியோகான்) மற்றும் அவர்களின் தலைவர், அஜாக் (ஹயேக்) ஆகியோரின் தனிப்பட்ட கதைகள் மற்றும் வாழ்க்கையில் காதல், குடும்பம், தனிமை, மாயை, தோழமை அவர்கள் ஒவ்வொருக்குள்ளும் விதவிதமான சக்திகளை பற்றி காண்பித்து அனைவரும் தங்கள் வேற்றுமைகள், பகைகளை மறந்து ஒரே சக்தியாக இணைவதை பிரம்பிப்புடன் காட்சிப்படுத்தியுள்ளனர்.

ஒரு படத்தில் வெளி பிரபஞ்சத்திலிருந்து பழங்கால மெசபடோமியா வரை திறந்தவெளிகள், நிலப்பரப்புகள்,பாலிவுட் வழியாக, சிக்கலற்ற ஒரு சிக்கலான கதையை வைத்து, கிட்டத்தட்ட 2 மணி நேரம் 36 நிமிடங்களில் அனைத்தையும் காட்டி பிரம்மாண்டத்தையும், உயர் சிஜி தொழில்நுட்பத்தில் சக்திகளையும், தாக்குதல்களையும்  அதனுடன் கடவுள், கலாச்சாரம், சுதந்திரம், மனிதர்களுக்குள்ளே சண்டைகள், மனிதநேயம், வாழ்க்கையின் அர்த்தம், நகைச்சுவை என்று லாஜிக் இல்லா மேஜிக் கலந்து சிறப்புற தந்திருக்கிறார் அகடமி விருது பெற்ற இயக்குனர் சோலோ ஜாவோ. மனிதர்களை காப்பாற்ற எட்டர்னல்ஸ் இவ்வுலகிற்கு வரவில்லை அவர்களை பாதுகாக்கவே வந்திருப்பதை சுட்டிக்காட்டி உடல் வலிமையை விட மன வலிமையை ஆழமாக இந்த படத்தில் சொல்;லியிருப்பதே படத்தின் சிறப்பம்சம்.
மார்வல் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக திரையரங்கில் எட்டர்னல்ஸ் களமிறங்கி வெற்றி நடை போடுகிறது.