ஊரடங்கு நேரங்களில் தொடர்ந்து உதவி வரும் நடிகர் சரண் செல்வம்

0
137

ஊரடங்கு நேரங்களில் தொடர்ந்து உதவி வரும் நடிகர் சரண் செல்வம்

கொரோனா ஊரடங்கில் பலதரப்பட்ட மக்களும் வேலைவாய்ப்பின்றி பொருளாதார சிக்கலில் இருந்துவரும் வேளையில் , சினிமா தொழிலாளர்கள் நிலமையும் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
தொழில் நுட்பக்கலைஞர்கள், துணை நடிகர்கர்கள் என்று பலரும் வேலையின்றி இருக்கின்றனர். பலரும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உதவிவருகிறார்கள்.

நடிகர் சரண் செல்வம் இந்த ஊரடங்கு நேரத்தில் பலருக்கும் உதவிவருகிறார். உணவுப்பொருட்கள், உள்ளிட்டவைகள் தொடர்ந்து உதவிவரும் நிலையில் சினிமா நடிகர் நடிகைகள் ஒருங்கிணைப்பாளர் சங்கத்தை சார்ந்தவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கினார்.
ஊரடங்கு தொடரும் பட்சத்தில் சினிமா தொழிலாளர்கள் பெரும் சிக்கலுக்கு உள்ளாவார்கள். நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வது அவசியமாகிறது.

அடிப்படை உணவு பொருட்களுக்குக்கூட சிரமப்படும் தொழிலாளர்கள் பலர் இருந்தாலும் எவரிடமும் சென்று உதவி கேட்பதில் தயக்கம் இருக்கும். அப்படி தயக்கத்திலிருப்பவர்களுக்கு நானாக சென்று உதவிவருகிறேன்.
நாம் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு முதலில் உதவுவோம் என்கிறார் சரண் செல்வம்.

சரண் செல்வம் தமிழில் அகம் புறம் , திருட்டு ரயில் , அத்தியாயம் , காசேதான் கடவுளடா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் .

இந்த நிகழ்வில் நடிகர்கள் ஒருங்கிணைப்பாளர் சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள் தலைவர் மனோஜ் கிருஷ்ணா , ஜெனிஃபர் , வேல்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு உதவிகள் வழங்கினார்கள் .