ஊரடங்கில் நிச்சயதார்த்தம்… நடிகை மியா ஜார்ஜூக்கு செப்டம்பரில் திருமணம்?

0

ஊரடங்கில் நிச்சயதார்த்தம்… நடிகை மியா ஜார்ஜூக்கு செப்டம்பரில் திருமணம்?

மலையாளத்தில் முன்னணியில் இருக்கும் நடிகை மியா ஜார்ஜ். இவர் தமிழில் அமரகாவியம், ஒரு நாள் கூத்து, இன்று நேற்று நாளை உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வரும் இவர், தற்போது விக்ரமின் கோப்ரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

லாக்டவுனால் வீட்டில் இருக்கும் மியா ஜார்ஜுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அந்தவகையில், மியா ஜார்ஜுக்கு அஷ்வின் பிலிப் என்பவருக்கும் திருமணம் செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். அவர்களது நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்துள்ளது.

வருகிற செப்டம்பர் மாதம் அவரது திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.